உடல் எடை மளமளவென குறைய... ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் சில பழக்கங்கள்

Japanese Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க வேண்டும், என்று ஆசைப்படாதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அதற்காக பலர் பல்வேறு, டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.

உடல் எடை, தொப்பை கொழுப்பு ஆகியவை, உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, தோற்றத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது. எனவே உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். ஆனால் அது ஆரோக்கியமான வழியாக இருக்க வேண்டும்.

1 /11

Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில், பலர் கடுமையான டயட் முறைகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால், அதைவிட, இயற்கையான முறையில் சீராக, உடல் எடையை குறைப்பது, நல்ல தீர்வை தரும். அந்த வகையில் ஜப்பானியர்கள் பின்பற்றும், வழிமுறைகள், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவும்

2 /11

அளவோடு சாப்பிடுதல்: மூக்கு பிடிக்க வயிறு முட்ட சாப்பிடுவது, எப்பொழுதுமே ஆரோக்கியமானதல்ல. வயிறு 80 சதவீதம் நிறைந்ததுமே, சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை படிப்படியாக சீராக குறைய உதவும்.

3 /11

டயட் தேர்வு: உணவுகளை தேர்ந்தெடுக்கும் போது, அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவை டயட்டில் சேர்ப்பது அவசியம். காய்கறிகள் பழங்கள் முழு தானியங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் பதப்படுத்த உணவுகளை விலக்கி வைக்க வேண்டும். இது மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடை குறைய உதவுகிறது.

4 /11

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகள்: மீன் உணவுகள் கடல் உணவுகள் ஆகியவை புரதம் மற்றும் மேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தவை. இவை தசைகளை வலுப்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறைய உதவுகிறது. நட்ஸ் வகைகளும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்தவை.

5 /11

ப்ரோபயோடிக் உணவுகள்: உடல் எடை குறைய செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஜீரண பிரச்சனைகளை போக்கும் ஆற்றல் நிறைந்த ப்ரோபயோடிக் உணவுகள் உதவும். உடலில் நல்ல பாக்டீரியாவை தூண்டி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறன் இதற்கு உண்டு.

6 /11

வேகவைத்த உணவுகள்: ஜப்பானியர்கள் பின்பற்றும் டயட்டில், வேக வைத்து உணவுகள் தான் அதிகம் இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகளை ஜப்பானியர்கள் டயத்தில் காண்பது அரிது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் தவிர்க்கப்படுவதோடு, எடுத்துக் கொள்ளும் கலோரிகளும் மிகவும் குறைவாக இருக்கும்.

7 /11

ஆக்டிவான வாழ்க்கை முறை: ஜப்பானியர்கள், போக்குவரத்திற்காக கார் போன்றவற்றை பயன்படுத்துவதை விட சைக்கிளில் செல்வதையே விரும்புவார்கள். அதோடு முடிந்த அளவு நடந்து செல்வார்கள். அதே போன்று லெஃப்ட் எஸ்கலேட்டர் பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

8 /11

சாப்பிடுவதற்காக தேர்ந்தெடுக்கும் தட்டுகள் மற்றும் கிண்ணங்கள் சிறிய அளவில் இருப்பதால், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு இயற்கையாகவே குறைந்து விடும். சிறிய தட்டு மற்றும் கிண்ணங்கள் நிறைய சாப்பிடுவது, வயிறு நிறைந்த உணர்வைத் தரும். நம் நிறைய சாப்பிட்டதாக மூளை செய்தியை அனுப்பும்.

9 /11

கிரீன் டீ: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பின் கிரீன் டீ சாப்பிடுவது வழக்கமாகக் கொண்டால், மெட்டபாலிசம் அதிகரித்து, உணவு எளிதில் ஜீரணம் ஆகி, உடல் எடை குறைய உதவும்.

10 /11

ஜப்பானியர்கள் பயன்படுத்தும் மேற்கண்ட ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலம், உடல் பருமனை படிப்படியாக குறைக்கலாம். அதோடு, சீரான ஊட்டச்சத்துடன், ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.