தமிழக பட்ஜெட் 2025: தொழிலாளர்களுக்கு என்ன செய்யப்போகிறது திமுக அரசு? எதிர்பார்ப்புகள் இதுதான்

Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு 2025 பட்ஜெட்டின் மீது தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை ஆகியோரின் முக்கிய கோரிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் குறித்து இங்கு காணலாம்.

தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) 2025-26 நிதியாண்டின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், துறை சார்ந்த அமைப்பினர் நிதித்துறையின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த பிப். 18ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.

1 /10

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Budget 2025) வரும் மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது மார்ச் 14ஆம் தேதி நடக்கும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்படும்.

2 /10

அந்த வகையில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை, உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

3 /10

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் கடந்த பிப். 18ஆம் தேதியில் இருந்து இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை, சிறு குறு தொழில் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சேர்ந்த அமைப்பினர் கலந்துகொண்டனர்.

4 /10

நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (Tamil Nadu Finance Minister Thangam Thennarasu) இன்று அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, துறை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இந்த துறைகளை சேர்ந்த அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

5 /10

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நேற்று சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர்,  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுதபட்டோர், இந்து சமய அறநிலைய துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.

6 /10

நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

7 /10

இந்நிலையில், சிறு குறு தொழில்துறையினர் (Small and Micro Industries) பொதுவாக முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து இங்கு காணலாம். கடந்தாண்டு பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அறிவித்தது. இருப்பினும் அதனை விரைந்து செயல்படுத்தி, அரசே அதற்கான இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

8 /10

தொழிலாளர்கள் தங்கும் விடுதி அறிவிக்கப்பட்டதை போல் சென்னை, கோவை மாவட்டங்களில் அமைக்கப்பட்டன. இவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.  குறுந்தொழில்களுக்கு முதலீட்டு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

9 /10

மின்கட்டணத்திற்கு நிறைய மானியங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் தொழில்துறையினர், சூரிய மின்சக்தி பயன்பாட்டுக்கு பல சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

10 /10

தொழில் வரி, சொத்து வரி செலுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள தொழில்துறையினர், சிறு குறு தொழில்களுக்கு இடம் வாங்கும் போதோ, சொத்து வாங்கும் போதோ அதற்கான பத்திரவுப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தற்போது 50 சதவீதமாக இருக்கு வரி விலக்கு 60% ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.