Giloy Health Benefits: ஆயுர்வேதத்தில் பல அற்புத மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, பல கடுமையான நோய்களுக்கு மருந்தாக உள்ளது. அவற்றில் ஒன்று கிலோய் அல்லது சீந்தில் (Tinospora cordifolia). இது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரம் . இதய வடிவில் இலை கொண்ட இந்த செடி பல அரிய சக்திகளை கொண்டுள்ள நிலையில் இந்த அற்புத மூலிகையின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் கிலோய்
உடலில் உள்ள வாதம், பித்தம், மற்றும் கபம் போன்ற உடலின் மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்த கிலோய் உதவுகிறது. ஆயுர்வேதம், சரக் சம்ஹிதை மற்றும் வீட்டு மருத்துவத்தில் விலைமதிப்பற்ற மருந்தாக கருதப்படும் கிலோய் என்னும் சீந்தில், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. சுஷ்ருத சம்ஹிதையிலும் இதன் பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிலோய் இலைகள் சுவையில் துவர்ப்பு மற்றும் கசப்பானவை.
கிலோயின் மருத்துவ குணங்கள்
சுஷ்ருத சம்ஹிதையில் கிலோயின் மருத்துவ குணங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எந்த மரத்தில் ஏறினாலும் அதன் சில குணங்களை உள்வாங்கும் கொடி இது. எனவே, வேப்ப மரத்தில் வளர்க்கப்படும் கிலாய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிலோயின் தண்டு ஒரு கயிறு போலவும் அதன் இலைகள் வெற்றிலை வடிவமாகவும் இருக்கும். அதன் பூக்கள் மஞ்சள் மற்றும் பச்சை கொத்தாக தோன்றும், அதன் பழங்கள் பட்டாணி போன்றவை. நவீன ஆயுர்வேதத்தில், இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் மருந்தாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த கிலோய்
கிலோய் செரிமானத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் பசியை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தினமும் கிலோய் சாப்பிடுவதால் தாகம், எரிச்சல் உணர்வு, நீரிழிவு நோய், தொழுநோய், மஞ்சள் காமாலை, பைல்ஸ், காசநோய் மற்றும் சிறுநீர் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்களின் பலவீனத்தை நீக்க அத்தியாவசிய மருந்தாகவும் பயன்படுகிறது.
கிலோயின் மருத்துவ நன்மைகள்
1. கிலோய் பார்வையை மேம்படுத்துகிறது. இதன் சாறு திரிபலாவுடன் கலந்து சாப்பிட்டால் கண்களின் பலவீனம் நீங்கும்.
2. அஸ்வகந்தா, உள்ளிட்ட சில மூலிகைகளுடன் கிலோய் கலந்த கஷாயத்தை உட்கொள்வது காசநோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.
3. காதுகளை சுத்தம் செய்ய, கிலோய் தண்டை தண்ணீரில் தேய்த்து, அதை சூடாக்கி, காதில் வைத்தால் காதுகளில் சேர்து மெழுகு போன் அழுக்கு நீங்கும்.
4. விக்கல் ஏற்பட்டால், உலர்ந்த இஞ்சியுடன் இதைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இது தவிர, அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெற, உதவும்.
5. கிலோய் சாறு குடித்து வந்தால், வாந்தி மற்றும் வயிற்று எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் உதவும்.
6. பைல்ஸ் பிரச்சனையிலும் கிலோய்க்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கடுக்காய், கொத்தமல்லி மற்றும் கிலோய் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் கஷாயத்தை சாப்பிட்டால், மூல நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
7. கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதில் கிலோய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புதிய கிலோய், வோக்கோசு, அரச இலைகள் மற்றும் வேம்பு ஆகியவற்றைக் கலந்து கஷாயமாகக் குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்.
8. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஜிலோய் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேனுடன் கலந்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
9. யானைக்கால் நோய் அல்லது ஃபைலேரியாசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கிலோய் நல்ல மருந்து. இதன் சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
10. கிலோய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கருப்பட்டியுடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
11. புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் வராமல் தடுக்கவும் ஜிலோய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இரத்த புற்றுநோயாளிகளுக்கு ஜிலோய் மற்றும் கோதுமை புல் சாறு கலவையை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பதஞ்சலியின் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
கிலோய் பக்கவிளைவுகள்
கிலோய் அற்புதமான மூலிகை என்றாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்து. பொதுவாக கிலோய் கஷாயத்தை 20-30 மில்லி என்ற அளவில் உட்கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ளக் கூடிய அதன் சாறு அளவு 20 மில்லி மட்டுமே. இருப்பினும், அதிக நன்மைகளுக்கு ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உங்கள் வீட்டில் கைக்குழந்தைகள் இருக்கிறதா? தவறாமல் கடைபிடிக்க வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ