உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022க்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 23) தொடங்கியது. நான்காம் கட்ட தேர்தலில், ஒன்பது மாவட்டங்களில் மொத்தம், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல கேபினட் அமைச்சர்கள், ராய் பரேலியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அதிதி சிங், உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் உட்பட 624 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இந்த சுற்று வாக்குப்பதிவில் முடிவாகும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளில் 800 கம்பனிகளின் துணை ராணுவப் படையினரும், 60,000 போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 208 காவல் நிலையப் பகுதிகளில் உள்ள 13,813 வாக்குச் சாவடிகளிலும், 24,580 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேலும் படிக்க | உலகில் கொந்தளிப்பான இன்றைய சூழலில் இந்தியா வலுவாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் நான்காம் கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்பு அமைச்சரும் பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Defence Minister and BJP leader Rajnath Singh cast his vote at a polling booth in Lucknow. #UttarPradeshElection2022 pic.twitter.com/sWZSi2yTnz
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 23, 2022
லக்னோவில் வாக்களித்த மாயாவதி, பாரதிய ஜனதா கட்சியை பற்றி எதுவும் கூறவில்லை என்றாலும், சமாஜ்வாதி கட்சியை கடுமையாக தாக்கினார். ‘பகுஜன் சமாஜ் கட்சி தனித்து அனைத்து பிரிவினரின் வாக்குகளையும் பெற்று வருகிறது. பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் தாங்கள்தான் வெல்வோம் என கூறி வருகின்றன. முடிவுகள் வெளியாகும் போது, 2007ம் ஆண்டு போல், பகுஜன் சமாஜ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும்.’ என்றார் அவர்.
எஸ்பியின் செயல்பாடு குறித்து சிறுபான்மையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மேலும் கூறுகையில், ‘சமாஜ்வாதி கட்சியின் செயல்பாடுகள் குறித்து சிறுபான்மையினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சி அமைக்கும் கனவில் இருக்கும் எஸ்பி-யின் கனவு தகர்ந்து போகும். சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம், அந்த நேரத்தில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது அதிக துன்புறுத்தல்கள் நடந்துள்ளன.’ என்றார்.
மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR