Kisan Credit Card: நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் ஒன்று கிசான் கிரெடிட் கார்டு. விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கும், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் கிசான் கிரெடிட் கார்டு வசதி வழங்கப்படுகிறது.
விவசாயிகள் பொதுவாக பல வித சவால்களை எதிர்கொள்கிறார்கள். பருவமழை, வெள்ளம், பயிர் பூச்சிகள், நிதி நெருக்கடி என இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். பல சமயங்களில் நிதி பற்றாக்குறையால், விவசாயிகள் சரியான நேரத்தில் விதைகளை விதைக்க முடியாமல் போகின்றது. இதன் விளைவாக, பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, சில நேரங்களில், நிதி பற்றாக்குறையால், விவசாயிகளின் வயல்கள் பருவம் முழுதும் எதுவும் விதைக்கப்படாமல் காலியாகவே இருக்கும் நிலையும் உண்டாகின்றது. இது விவசாயிகளின் குடும்பத்திற்கு அன்றாட வாழ்க்கையை நிர்வகிப்பதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
கிசான் கிரெடிட் கார்டு: இந்த கார்டு விவசாயிகள், மீன் பராமரிப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு தொழிலாளர்களுக்கு எவ்வாறு உதவுகின்றது?
விவசாயிகள், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கிசான் கிரெடிட் கார்டை (KCC) வழங்குகிறது. இந்தத் திட்டம் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு பணிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பல விவசாயிகளின் பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. இதற்கு தீர்வு காண இந்த கார்டு உதவுகின்றது.
KCC Loan Limit: KCC கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டது
மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிசான் கிரெடிட் கார்டு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். விவசாயிகள், மீன் பராமரிப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலாளர்களுக்கு KCC சலுகைகள் கிடைக்கும். KCC மூலம், வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன.
உத்தரவாத உறுதி இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன்
விவசாய பணிகளுக்கு, விவசாயிகள் நிலம் தொடர்பான ஆவணங்கள், தலைமை அதிகாரியால் சரிபார்க்கப்பட்ட அறிவிப்பு படிவம் அகியவற்றுடன் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம். ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு, மண்டல அலுவலகத்திலிருந்து நில நிலைச் சான்றிதழ் தேவைப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த செக்யூரிடியும், அதாவது, பாதுகாப்பு உத்தரவாதமும் தேவையில்லை.
ஆடு மற்றும் மாடு வளர்ப்பவர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்
- மீன் வளர்ப்பாளர்கள் கூண்டுகள், முட்டையிடுதல், விதைகள் மற்றும் மீன் வளர்ப்புக்குத் தேவையான பிற பொருட்களுக்கு KCC கடன்களைப் பெறலாம்.
- கால்நடை வளர்ப்பாளர்கள் ஆடு மற்றும் மாடு வளர்ப்பிற்காக KCC இன் கீழ் கடன்களைப் பெறலாம்.
- விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான துறை அலுவலகம் மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கியிலோ சமர்ப்பிக்கலாம்.
- நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மான்/முயல் வளர்க்கும் ஒரு நபர் KCC கடனாக ரூ.30,000 பெறலாம்.
- இரண்டு பசுக்களை வளர்க்கும் நபர்கள் ரூ.59,000 KCC கடன் பெறலாம்.
- 10 பசுக்களை வளர்ப்பவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
- இதற்கு எந்த வித அடகு / உத்தரவாத உறுதி ஆகியவையும் தேவையில்லை.
KCC Loan: இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? வட்டி விகித சலுகைகள் என்ன?
- KCC-யின் நன்மைகளைப் பெற, கணக்கு வைத்திருக்கும் நபர் தங்கள் ஆதார் அட்டை, PAN அட்டை மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களின் நகலைச் சமர்ப்பித்து வங்கியில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பத்தில் எந்தப் பிழையும் இல்லை என்றால், கடன் விரைவாக அங்கீகரிக்கப்படும்.
- KCC கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7% ஆகும்.
- கடன் வாங்கியவர் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தினால், அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து 3% மானியமும், மாநில அரசிடமிருந்து 4% மானியமும் கிடைக்கும்.
- இதனால் வட்டி பூஜ்ஜியமாகும்.
- KCC கடன் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டவுடன், வங்கி அடுத்த கடனை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக வழங்கும்.
மேலும் படிக்க | ஓய்வூதியம் கிடையாதா... கவலையை விடுங்கள்... வந்துவிட்டது LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்
மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ