FASTag பயன்படுத்துபவர்கள், அதன் விதிகள் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளவது அவசியம். பிப்ரவரி 17 முதல் ஃபாஸ்டேக் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த விதிகள் அனைத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம், சிக்கலில் சிக்குவதையும் அபராதம் செலுத்துவதையும் தவிர்க்கலாம்.
முதல் விதி FASTag பிளாக் செய்யப்பட்ட பயனர்கள் பட்டியல் தொடர்பானது
1. உங்கள் FASTag பிளாக் செய்யப்பட்ட பயனர்கள் பட்டியலில் இருந்தால், உங்களால் எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது.
2. FASTag பிளாக் செய்யப்பட்ட பட்டியலில் இருந்தாலோ அல்லது ஆக்டிவ் ஆக இல்லை என்றாலோ அல்லது சுங்கச்சாவடியை அடைவதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் வரை இருப்பு இல்லை என்றால், பரிவர்த்தனை செய்ய முடியாது.
3. ஸ்கேன் செய்த பிறகு 10 நிமிடங்களுக்கு FASTag பிளாக் செய்யப்பட்ட பட்டியலில் இருந்தாலும், கட்டணம் நிராகரிக்கப்படும்.
உங்கள் FASTag தடை செய்யப்பட்ட பயனர் பட்டியலில் இருந்தாலோ, ஆக்டிவ் ஆக இல்லை என்றாலோ அல்லது குறைந்த இருப்பு இருந்தாலோ, டோலைக் கடக்கும்போது, கணினி பிழைக் குறியீடு 176 என்ற எண்ணை காண்பிக்கும். இதனால், அபராதமாக, நீங்கள் அபராதமாக சுங்க வரியின் இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டும்.
இரண்டாவது விதி ரீசார்ஜ் செய்வதற்கான சலுகைக் காலம் தொடர்பானது.
1. உங்கள் FASTagஐ ரீசார்ஜ் செய்யு உங்களுக்கு 70 நிமிடங்கள் அவகாசம் இருக்கும். சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு 70 நிமிடங்களுக்கு முன் பாஸ்டேக் நிலையை சர்பார்த்துக் கொள்ளவும். அல்லது அதன் நிலையை சரிபார்த்து சீர் செய்யலாம்.
2. சுங்கச்சாவடியைக் கடந்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் FASTagஐ ரீசார்ஜ் செய்தால், அபராதத் தொகை வரி திரும்பப் பெறப்படும்.
FASTag இன் மூன்றாவது விதி, தாமதமான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது பற்றியது.
1. சுங்கச்சாவடியைக் கடந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு FASTag கணக்கை ரீசார்ஜ் செய்தால், சுங்கவரிக்கு மேல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
2. FASTag பிளாக் செய்யப்பட்ட பட்டியலில் அல்லது குறைந்த இருப்பு காரணமாக தவறான விலக்கு அளிக்கப்பட்டால், நீங்கள் 15 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம் மற்றும் வங்கியிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்.
புதிய விதிகள் உணர்த்துவது என்ன?
1. கடைசி நிமிட ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. சுங்கச்சாவடியை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்களால் FASTagஐ ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், கடைசி நேரத்தில் அதை ரீசார்ஜ் செய்வதால் எந்தப் பயனும் இல்லை.
2. ஸ்கேன் செய்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்தால் அபராதம் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
3. சுங்கச்சாவடியைக் கடக்கும் முன், FASTag இன் இருப்பைச் சரிபார்த்து, கணினியில் ஏதேனும் பிழை உள்ளதா என்பதை அறிய, சுங்கச்சாவடியில் பரிவர்த்தனையைப் பார்க்கவும்.
FASTag தொடர்பான விஷயங்களை எல்லாச் சூழ்நிலைகளிலும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
முதலில், FASTag வாலட்டில் போதுமான இருப்பு இருக்க வேண்டும்.
உங்கள் ஃபாஸ்டேக் பிளாக் செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அதன் நிலையை தொடர்ந்து சரிபார்க்கவும்.
சுங்கச்சாவடியில் எந்தவிதமான நிராகரிப்புகளையும் தவிர்க்க, கண்டிப்பாக FASTag ஆக்டிவ் ஆக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ