நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை - விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு பதில்

Parliament Monsoon Session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்நிலை சரியானவுடன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 26, 2022, 06:40 PM IST
  • நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை
  • உடல்நிலை சீராகி வந்தவுடன் விலைவாசி உயர்வு குறித்த விவாதம்
  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில்
நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை - விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு பதில் title=

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், சாந்தனு சென், நதிமல் ஹக், அபி ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் சாந்தா சேத்ரி ஆகிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ-எம்-ஐச் சேர்ந்த ஏ.ஏ.ரஹீம் மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

மேலும் படிக்க | Parliament Monsoon Session: திமுக உட்பட 19 ராஜ்யசபா எம்பிக்கள் இடைநீக்கம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது எனவும், சபாநாயகரின் முறையீடுகளை அவர்கள் பலமுறை புறக்கணித்தனர் என்றும் கூறினார்.

தாங்கள் விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் மீண்டும் அவை நடவடிக்கைகளை சீர்குலைத்து வருவதாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, உடல்நிலை சீராகி வந்தவுடன் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெறும் என நம்புவதாகவும் பியூஷ் கோயல் கூறினார். 

இதனை ஏற்க மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பிரதமர் மோடி பதிலளிக்கலாம் எனவும், பணவீக்கத்திற்கு மத்திய அரசிடம் பதிலில்லை என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News