பொதுவாக, க்ரீன் டீ உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதே போன்ற எண்ணத்துடன், தொடர்ந்து கிரீன் டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளது என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிகமாக க்ரீன் டீ குடிப்பதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளடு என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதிக கிரீன் டீயினால் ஏற்படும் பக்க விளைவுகளில், தலைவலி, சோம்பல், சோம்பல், பதட்டம் மற்றும் எரிச்சல் ஆகியவை அடங்கும். இந்நிலையில், கிரீன் டீ குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
க்ரீன் டீயை அதிகம் அருந்துவதால், தூக்கம் பாதிக்கப்படும்
க்ரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, முழுமையான சிறந்த தூக்கம் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, கிரீன் டீயை சரியான அளவில் அளவோடு உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்
கிரீன் டீயை அதிகமாக குடிப்பதாலும் ரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும். க்ரீன் டீயில் உள்ள காஃபின் நமது நரம்பு மண்டலத்தை செயல்படச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்வது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாடு இருக்கலாம்
இதைத் தவிர, கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல நோய்களை வரவேற்தாக ஆகி விடும்.
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்னை
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். கிரீன் டீயை ஏதாவது சாப்பிட்ட பின்னரே உட்கொள்ள வேண்டும் என்று நம்பப்படுகிறது. கிரீன்-டீயில் உள்ள காஃபின் நரம்புத் தளர்ச்சி, தலைச்சுற்றல், நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR