8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஜனவரி 2026 முதல் உங்கள் ஊதியம் எவ்வளவு உயரும் தெரியுமா? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: ஜனவரி 2026 முதல் 8வது ஊதியகுழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டத்து. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறுகிறார்கள். இது 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இப்போது 8வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுக்காக காத்திருக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டத்து. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இப்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுக்காக காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறுகிறார்கள். இது 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், அடுத்த ஊதியக்குழுவின் கீழ் 1.92-2.08 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளார். இருப்பினும், NC–JCM (தேசிய கவுன்சில் – கூட்டு ஆலோசனை அமைப்பு) பிரிவு ஊழியர்களின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிரணயிக்கப்படக்கூடும் என கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 53% ஆக உள்ளது. ஜனவரி 2026 -க்கு முன்னர் இது இன்னும் 2 முறை அதிகரிக்கப்படும். அகவிலைப்படி 3-4% அதிகரிக்கும் என்ற கணிப்பு உள்ளது. சராசரியாக ஜனவரி 2026 -க்கு முன்னர் இதில் 7% ஏற்றம் இருக்கலாம்.
அதன் படி ஜனவரி 2026 -க்குள் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 60% ஐ எட்டியிருக்கும். வழக்கமாக, ஊதியக் குழுக்கள் 15% முதல் 30% வரை அதிகரிப்புகளைப் பரிந்துரைத்துள்ளன. முந்தைய ஊதியக் குழு சுமார் 14-15% அதிகரிப்பைப் பரிந்துரைத்தது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) உட்பட தற்போதைய சம்பளத்தில் 20-30% அதிகரிப்பை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடும் என்று கார்க் கணித்துள்ளார்.
8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது அகவிலைப்படி 60% ஆக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.18,000 ஆகும். புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும் நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) அதாவது (ரூ.18,000 + DA) = ரூ.28,800 ஆகும்.
8வது ஊதியக் குழுவின் கீழ் புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்னவாக இருக்கும்? ஃபிட்மெட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் = ரூ.34,560 (தற்போதைய சம்பளத்தில் இது 20% அதிகரிப்பு, இதில் அடிப்படை + அகவிலைப்படி அடங்கும்).
ஃபிட்மெட் ஃபாக்டர் 2.08 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் = ரூ.37,440 (தற்போதைய சம்பளத்தில் இது 30% அதிகரிப்பு, இதில் அடிப்படை + அகவிலைப்படி அடங்கும்).
ஃபிட்மெட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் = ரூ.51,480 (தற்போதைய சம்பளத்தில் இது 80% அதிகரிப்பு, இதில் அடிப்படை + அகவிலைப்படி அடங்கும்).
இருப்பினும், அகவிலைப்பைட்யை நாம் விலக்கினால், 1.92 ஃபிட்மென்ட் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு 92% ஆகவும், 2.08 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் 108% ஆகவும், 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் 186% ஆகவும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.