Weight Loss Tips: உடல் பருமன் உலக அளவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது அத்தனை எளிதல்ல. குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரித்து விட்டால், அதை குறைக்க பல முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும்.
எடை அதிகரிக்கத் தொடங்கினால் அதை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஏனெனில் உடல் பருமன் தன்னம்பிக்கையை குறைக்கிறது. எடை இழப்பு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
கட்டுப்பாடில்லாமல் எடை அதிகரிப்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், சில வகையான புற்றுநோய்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், கீல்வாதம், மூட்டுவலி, மலட்டுத்தன்மை மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். நமது சமையலறையில் வைத்திருக்கும் சில மலிவான பொருட்களைக் கொண்டே இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க முடியும். நம் சமையலறையில் இருக்கும், நாம் அன்றாடம் பயன்படுத்டும் சில பொருட்களே எடை இழப்பில் பெரிதும் உதவும்.
தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சமையலறை பொருட்கள் பற்றி இங்கே காணலாம்.
Honey: தேன்
தேன் நேர்த்தியான வழியில் வேகமாக கொழுப்பை எரிப்பதாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் பருமனால் அவதியில் உள்ளவர்கள் அதை உணவில் சேர்ப்பதால் எடையைக் குறைக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீரை உட்கொண்டால் வேகமாக எடை குறையத் தொடங்கும்.
Turmeric: மஞ்சள்
நாம் தினசரி சமையலில் மஞ்சளை பயன்படுத்துகிறோம். ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எடை இழப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம். மஞ்சள் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. அதிகப்படியான சளியைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. தினமும் அரை டீஸ்பூன் மஞ்சளை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் தேன்/நெல்லிக்காயுடன் சேர்த்து உட்கொள்ளலாம். கலோரிகளை வேகமாக குறைக்க இது உதவுகிற்து.
Ginger: இஞ்சி
இஞ்சி பல வித ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு உணவுப்பொருளாகும். காலையில் இஞ்சி டீ குடிப்பது மிக நல்லது. இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. மேலும் இதில் உள்ள பீனாலிக் கலவைகள் உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றன. இஞ்சி பசியையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. இது கபத்தை போக்க உதவுகிறது. இஞ்சி இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பீட்ரூட் சூப்பர்புட் வகை காய்கறி தான்... ஆனால் பக்க விளைவுகளும் உண்டு
மேலும் படிக்க | மூளையின் ஆற்றலை காலி செய்யும்... சில உணவுகளும்... சில பழக்கங்களும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ