சாணக்கிய நீதி: பணம் உங்களைத் தேடிவர நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்!

உலகம் போற்றும் மிகசிறந்த அறிஞர் சாணக்கியர். இவர் பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என்று பல்வேறு வகையில் சிறப்புமிக்க மனிதர். எல்லோரும் பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக விரும்புவர். ஆனால் எப்படிச் சரியான விஷயங்களைச் செய்தால் பணக்காரர் ஆகலாம் என்று இவர் கூறுகிறார்.

பணம் சம்பாதிக்கவும் ,வாழ்க்கை ஒழுக்கங்கள் பற்றியும் பல்வேறு நிதியை இவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சம்பாதிக்கவும் சில விஷயங்களை நீங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்தால் நீங்கள் அம்பானிபோல் மிகப்பெரிய பணக்காரர் ஆகலாம். 

1 /8

நேரம்: சாணக்கியர் நேர மேலாண்மையைக் கூறுகிறார். வாழ்க்கையில் ஒரு செயலை செய்ய நேரம் மிகவும் முக்கியமானது. காலம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நேரம் யாருக்காகவும் காத்திருக்காது. நாம் தான் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

2 /8

உணர்வு: வாழ்க்கை வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணியாக விளங்குவது உணர்வு. உங்கள் இலக்கை நோக்கி  மட்டுமே பயணிக்க வேண்டும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

3 /8

வித்தியாசம்: மோசமான நேரங்களில் யாரும் உதவ முன் வரமாட்டார்கள். ஒருவரின் நேரம் நன்றாக இருக்கும்போது பெருமையும் அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் எல்லா நேரங்களும் அப்படி அமையாது.

4 /8

செலவு: எந்தவொரு மனிதரும் பணத்தைச் சிந்தனையின்றி செலவிடக்கூடாது. கஷ்டமான நாட்களில் பணம் உதவியாக இருக்க வேண்டும். எனவே சேமிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று.

5 /8

நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் உங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பான கவனம் செலுத்துங்கள். சரியான வழியில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே கையில் தங்கும். ஒழுக்கக்கேட்டின் வழியில் சம்பாதிக்கும் பணம் நிலையாக இருக்காது.

6 /8

உழைப்பு: கடினமான உழைப்பு ஒருபோதும் கைவிடாது. ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் கண்டிப்பாகச் செல்வங்களைப் பெறுவார்கள்.  

7 /8

தர்மம்: சாணக்கியரின் கூற்றுப்படிப் பணம் தர்மம் செய்வது போன்ற செயல்கள் வாழ்க்கையில் செல்வங்களை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். அந்தவகையில் அதிகப்படியான தானம் தீங்கும் விளைவிக்கும் என்கிறார்.

8 /8

பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. அதை முறையாகப் பயன்படுத்துவதையும் தெரிந்திருக்க வேண்டும். பணத்தைப் புத்திசாலியாகப் பயன்படுத்தினால் நீங்கள்தான் மிகப்பெரிய பணக்காரர் என்கிறார் சாணக்கியர்.