Ration card News | ரேஷன் கார்டு பிரச்சனைகளை தீர்க்க மாதம் தோறும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தபடும். அந்தவகையில் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் இருப்பவர்கள் ரேஷன் கார்டு பிரச்சனை இருந்தால் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கும் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விதியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும். மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கள் தொடர்பான பொதுமக்கள் குறைதிர கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 08.02.2002 ஈனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் அதன் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நான் கூட்டம், தனி வட்டாட்சியர்கள் / வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி கிழக்கு மகாலெட்சுமி நகர், திருச்சிராப்பள்ளி மேற்கு காஜாமலை, ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, திருவெறும்பூர் நடராஜபுரம், மணப்பாறை மொண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் குறைதீர் முகாம்கள் நடைபெறும்.
மருங்காபுரி வெங்கட்நாயகன் பட்டி, லால்குடி நெய்குப்பை, மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர், முசிறி வேளக்காநத்தம், துறையூர் மினி சூப்பர் 3, தொட்டியம் மணமேடு 1 ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியாயவிலைக்கடை குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளான குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரேஷன் கார்டு புகார் ஆன்லைனில் அளித்திருந்தாலும் அது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு சிக்கல்களுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? இதை செய்யவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ