Health Alert: எச்சரிக்கை! கோவேக்சின் தடுப்பூசிக்கு பிறகு பாராசிட்டமால் மாத்திரை தேவையில்லை!!

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான முக்கிய தகவலை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது... 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2022, 07:25 AM IST
  • சிறார்களுக்கான தடுப்பூசி தொடர்பான எச்சரிக்கை
  • கோவேக்சினுக்கு பிறகு வலி நிவாரணி கூடாது
  • பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
Health Alert: எச்சரிக்கை! கோவேக்சின் தடுப்பூசிக்கு பிறகு பாராசிட்டமால் மாத்திரை தேவையில்லை!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி என்பது பாதுகாப்பு கவசம். இந்த பாதுகாப்பு கடந்த ஓராண்டுகளாக போடப்பட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக 15-18 வயதிற்குட்பட்ட பதின் பருவத்தினருக்கு தடுப்பூசி கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.  

இது தொடர்பான சில தகவல்களும், எச்சரிக்கைகளும் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால், சில நோய்த்தடுப்பு மையங்களில் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி (Covaxin Jab) போட்ட பிறகு 500 மி.கி அளவிலான பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்ட பிறகு பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக். 

கோவாக்சின் தடுப்பூசி போட்ட இளம் பருவத்தினருக்கு பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை என்று தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் புதன்கிழமை (ஜனவரி 5, 2022) தெளிவுபடுத்தியது. 

"சில நோய்த்தடுப்பு மையங்கள் குழந்தைகளுக்கு கோவாக்சினுடன் 3 பாராசிட்டமால் 500 மி.கி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றன என்று எங்களுக்கு கருத்து கிடைத்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்ட பிறகு பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை" என்று பயோடெக் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட 30,000 நபர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம், சுமார் 10-20% நபர்களுக்கு பக்க விளைவுகள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை லேசானவை, 1-2 நாட்களுக்குள் குணமாகும், அதற்கு மருந்து தேவையில்லை. மருத்துவரை அணுகிய பின்னரே மருந்து பரிந்துரைக்கப்படும் என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. 

Also Read | கொரோனாவின் கொள்ளுப்பேரன் IHU! எவ்வளவு ஆபத்தானது?

"பாராசிட்டமால் வேறு சில கோவிட்-19 தடுப்பூசிகளுடன் பரிந்துரைக்கப்பட்டது என்றும், கோவாக்சின் தடுப்பூசிக்கு பிறகு பாரசிட்டமால் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை" என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெளிவுபடுத்தியிருக்கிறது. 

15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஜனவரி 3 அன்று நாடு முழுவதும் தொடங்கியது. குழந்தைகளுக்கு முதல் டோஸ் கோவாக்ஸின் தடுப்ப்பூசி போடப்படும் நிலையில், முதல் மூன்று நாட்களில், 1.06 கோடி குழந்தைகளுக்கு (Vaccination to Teenagers) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு, டிசம்பர் 24 அன்று அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியது. இந்த அங்கீகாரமானது, சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தமிழகத்தில் கொரோனா 3வது அலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News