பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க தயிர் தினமும் சாப்பிடவும்..!

Curd | பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் தினமும் தயிர் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2025, 06:27 PM IST
  • பெருங்குடல் புற்றுநோய்க்கு தீர்வு
  • தினமும் தயிர் சாப்பிட வேண்டும்
  • புற்றுநோய் வராமல் நீங்கள் தடுக்கலாம்
பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க தயிர் தினமும் சாப்பிடவும்..! title=

Curd Benefits Tamil | புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். சமீபத்தில், புதிய ஆராய்ச்சியில் தயிர் உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.தயிர் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகமிக நல்லதே. ஏனென்றால் தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன, இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. 

இந்த சூழலில் தான் தயிர் தினமும் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மாஸ் ஜெனரல் பிரிகாமின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறையாவது தயிர் சாப்பிட்டவர்களுக்கு பிஃபிடோபாக்டீரியம்-பாசிட்டிவ் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு 20 சதவீதம் மட்டுமே குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பெருங்குடல் புற்றுநோய் ஆய்வு

இந்த ஆய்வு 100,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 51,000 ஆண்களின் உணவுப் பழக்கத்தை குறிப்பாக ஆய்வு செய்துள்ளது. இவர்களில் 3079 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டது. நீண்ட காலமாக தயிர் உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 20 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.உலகளவில் மக்களில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய் உள்ளது. WHO-வின் கூற்றுப்படி, ஒவ்வொரு 10 புற்றுநோய் நோயாளிகளில் 1 ஒருவக்கு குடல் புற்றுநோய் இருக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணம்

பெருங்குடல் புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம், அதாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல், அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சியை உட்கொள்வது, உடல் பருமன், தவறான உணவுப் பழக்கம் ஆகியவை முக்கியமான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றன

தயிர் புற்றுநோயின் அபாயத்தை எவ்வாறு குறைக்கிறது? 

தயிரில் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் புரோபயாடிக்குகள் உள்ளன. தயிர் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சரியான காரணத்தை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் தயிர் குடல் நுண்ணுயிரியை மேம்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சர்க்கரை சேர்த்து சுவை மிக்கதாக மாற்றப்படும் தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காத இயற்கையான தயிர் உடலுக்கு நல்லது.

தயிரின் நன்மைகள்

தயிரில் கால்சியம், புரதம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. தயிர் சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்தும். சர்க்கரை மற்றும் உப்பு இல்லாமல் தயிர் உட்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. தயிர் உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

மேலும் படிக்க | 123 கிலோ இருந்த இன்ஸ்டா பிரபலம்... 48 கிலோ உடல் எடையை குறைக்க உதவியது என்ன?

மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News