புதுடெல்லி: புதிய கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் பாகம்-1 ஆகும், இது இந்தியாவின் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ரஷ்யாவின் ஒற்றை டோஸ் ஸ்புட்னிக் லைட் கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் டிசம்பர் 2021க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் புதன்கிழமை (நவம்பர் 24) ஒரு வெபினாரில் தெரிவித்தார். செப்டம்பரில் 3-ம் கட்ட பிரிட்ஜிங் சோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரி லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (Drugs Controller General of India (DCGI))அனுமதி அளித்துள்ளது.
முந்தைய அறிக்கைகளின்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் லைட் என்ற ஒற்றை-டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் பாகம்-1 ஆகும், இது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு இந்தியாவின் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தில் (Covid Vaccine) பயன்படுத்தப்படுகிறது.
ALSO READ | கொரோனாவுக்கு அடுத்து இந்தியாவை அச்சுறுத்தும் நோரா வைரஸ்?
ரஷ்ய ஸ்புட்னிக் V தடுப்பூசி குறித்த சான் மரினோ குடியரசின் சுகாதார அமைச்சகத்தின் (Ministry of Health of the Republic of San Marino) சர்வதேச அளவிலான தரவையும் இந்த வெபினாரில் RDIFஅறிவித்தது. இந்த தரவுகளின்படி, ஸ்புட்னிக் V தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்திய 6 முதல் 8 மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ( Coronavirus Panadamic) எதிராக 80 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் (mRNA vaccines) செயல்திறனை விட, ஸ்புட்னிக் V-இன் செயல்திறன் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2021இல் சான் மரினோவில் ஏற்பட்ட கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தத் தரவு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கு 5 மாதங்களுக்கு முன்னர், ஸ்புட்னிக் V தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட 18,600 நபர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஸ்புட்னிக் தடுப்பூசியின் செயல்திறன் கணக்கிடப்பட்டுள்ளது.
ALSO READ | மரபணு மாற்றப்பட்ட புழுவைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறியலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR