EPFO Update: மாத சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிலையான வட்டி விகிதங்களை வழங்குவதற்காக ஒரு புதிய இருப்பு நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், PF கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிலையான வட்டியைப் பெற முடியும். மேலும் அவர்களுக்கு சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து எந்த வித தாக்கமும் இல்லாமல் இருக்கும்.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
நிலையான இபிஎஃப்ஓ வட்டி விகிதத்திற்கு தேவையான இந்த நிதியை உருவாக்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் EPFO அதிகாரிகள் பலகட்ட ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபசிட் செய்யப்படும் தொகைக்கு நிலையான வட்டி அறிவிக்கப்படுவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன் தருமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் பங்களிப்பில் ஒரு நிலையான பகுதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது
PF நிதியின் ஒரு நிலையான பகுதி EPFO ஆல் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பல நேரங்களில் EPFO பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETF) மற்றும் பிற முதலீடுகளின் மூலம் குறைந்த வருமானத்தையே பெறுகிறது. இதன் சுமையை EPFO உறுப்பினர்களும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும்போது, அது EPFO முதலீட்டில் பெறப்பட்ட தொகையையும் பாதிக்கிறது. குறைந்த வருமானம் காரணமாக, EPFOவும் PF மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றது.
EPF Subscribers: இபிஃப் சந்தாதாரர்களுக்கு நிலையான வட்டி கிடைக்கும்
இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, முதலீட்டின் மீதான வருமானத்தை நிலையானதாக வைத்திருக்க உதவும் ஒரு இருப்பு நிதியை உருவாக்குவது குறித்து EPFO பரிசீலித்து வருகிறது. இது சந்தை நிலவரங்களை சார்ந்திருக்காது. ஆகையால், சந்தை நிலைகளுக்கு ஏற்ப மாறாமல், PF கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிலையான வட்டியைப் பெற இது உதவியாக இருக்கும்.
EPF Fixed Interest: நிலையான வட்டிக்கான இந்த நிதி எவ்வாறு செயல்படும்?
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வட்டியில் ஒரு பகுதியை EPFO ஒதுக்கி வைத்து, அதை ரிசர்வ் நிதியில் டெபாசிட் செய்யும். சந்தையில் சரிவு ஏற்பட்டு, முதலீடு மூலம் குறைந்த வருமானம் கிடைக்கும்போதெல்லாம், இந்த நிதியைப் பயன்படுத்தி வட்டி விகிதத்தை நிலையாக வைக்க திட்டம் உள்ளது. இதன் மூலம் ஏழு கோடிக்கும் மேற்பட்ட EPFO உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
எப்போது முடிவு எடுக்கப்படும்?
தற்போது இந்தத் திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் EPFO அதிகாரிகள் இதைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
இபிஎஃப் வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
1952-53 ஆம் ஆண்டில் EPFO தொடங்கப்பட்டபோது, அந்த நேரத்தில் இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) 3% வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. இது பின்வரும் காலங்களில் சீராக அதிகரித்துள்ளது. 1989-90 வாக்கில், இது 12% ஆக அதிகரித்தது. இது 2000-01 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இதன் பிறகு, அவ்வப்போது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, 2023-24 ஆம் ஆண்டில் EPFO வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது.
Central Board of Trustees: பிப்ரவரி 28 அன்று முக்கிய கூட்டம்
2024-25 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை முடிவு செய்ய, இபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28 அன்று கூடும். வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருப்பது அல்லது ஓரளவு அதிகரிப்பது குறித்து விவாதம் இதில் நடைபெறலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: அரசின் பரிசு, PF உறுப்பினர்களுக்கு விரைவில் நல்ல செய்தி
மேலும் படிக்க | UPI மூலம் ரூ. 30,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ