இந்தியா vs வங்கதேச சாம்பியன்ஸ் டிராபி போட்டி.. மழை பெய்யுமா? துபாய் வானிலை எப்படி?

Dubai Weather Report: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்?

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 20, 2025, 08:32 AM IST
இந்தியா vs வங்கதேச சாம்பியன்ஸ் டிராபி போட்டி.. மழை பெய்யுமா? துபாய் வானிலை எப்படி? title=

Champions Trophy 2025, India vs Bangladesh: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டம் வங்கதேசத்திற்கு எதிராக துபாயில் நடக்க உள்ளது. அதேபோல பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மற்ற இரண்டு குரூப் ஆட்டங்கள் துபாயில் நடக்க உள்ளன. ஆனால், நேற்று துபாயில் மழை பெய்ததால், வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இன்றும் மழை பெய்யுமா? என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்? இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ஆட்டத்தின் போது வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.

துபாய் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும். ஆனால் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு இந்தியா மற்றும் வங்கதேசம் தொடங்கும். இந்தியா மற்றும் துபாய் இடையிலான நேரம் என்பது சுமார் ஒன்றரை மணி வித்தியாசம் இருக்கும்.

துபாயில் மதியம் 100 மணிக்கு வானிலை பெரும்பாலும் வெயிலாக இருக்கும். மழை பெய்ய 7% வாய்ப்பு மட்டுமே உள்ளது. துபாய் நகரத்தில் எந்தப் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது மைதானத்திற்கு அருகிலும் இருக்கலாம் அல்லது நகரத்தின் எந்தப் பகுதியிலும் இருக்கலாம். அதாவது, துபாயில் மதியம் 1:00 மணியளவில் மழை பெய்ய மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது. 

அதாவது பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. அவ்வப்போது மேகங்கள் கூடலாம். மதியம் 1:00 மணி முதல். பிற்பகல் 3:00 மணி வரை வானிலை கிட்டத்தட்ட நன்றாக இருக்கும். 

அதேபோல மதியம் 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய மிகக் குறைவான வாய்ப்பு இருப்பதால், ஆட்டத்தின் நடுவில்  மழை பெய்ய வாய்ப்பில்லை. இந்த குறிப்பிட்ட நேரத்தில் முதல் இன்னிங்ஸ் கிட்டத்தட்ட முடிவடையும். 

மாலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வானம் மேகமூட்டமாகவே இருக்கும். மழை பெய்ய 7 சதவீதம் வாய்ப்பு மட்டுமே உள்ளது. எனவே இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ஆட்டத்தைப் பொறுத்தவரை மழையினால் எந்தவித அச்சுறுத்தல் இல்லை.

வானிலை மற்றும் துபாய் ஆடுகளத்தை வைத்து பார்த்தால், டாஸ் வெல்லும் அணிக்கு முதலில் பேட்டிங் செய்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வானம் மேகமூட்டமாக இருக்கும் என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு சாதகமான தேர்வாக இருக்கலாம். 

சமீபத்தில் இங்கிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணி நம்பிக்கையுடன் உள்ளது. எனவே அவர்கள் வங்கதேசத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி சாம்பியன்ஸ் டிராபியில் தங்கள் வேகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புவார்கள். மறுபுறம் வங்கதேசம் ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. குறிப்பிட்ட சில சர்வதேச தொடர்களில் முக்கிய அணிகளை வீழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க - LIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! டெல்லி முதல்வர் பதவியேற்பு! இந்தியா - பங்களாதேஷ் போட்டி - இன்றைய முக்கிய செய்திகள்!

மேலும் படிக்க - IND vs BAN: குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு இல்லை! இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

மேலும் படிக்க - சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News