இன்றைய வேகமான உலகில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியை கண்டுள்ளன. அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இருக்கும். தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட மொபைல் பயன்படுகிறது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதிக நன்மை மற்றும் தீமை என இரண்டும் நடக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபைல் எண் தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடக்கிறது. குற்றச்சம்பவங்களை அதிகமாக மொபைல் எண் வைத்து தான் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். அந்த வகையில் ஒரு மொபைல் எண் என்பது முக்கியமானதாக உள்ளது.
மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக லாபம்? ஒப்பீடு இதோ
ஒரே மொபைல் எண்
அதிக முக்கியத்துவம் இருக்கும் மொபைல் எண்ணை ஒரு சிலர் அடிக்கடி மாற்றுவது வழக்கம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலத்திற்கு பராமரிக்கும் செயல், அதாவது ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே எண்ணை வைத்து இருந்தால் அது ஒரு தனிநபரின் குணாதிசயத்திற்கு குறிப்பிடத்தக்க சான்றாக பார்க்கப்படுகிறது. ஒரே மொபைல் எண்ணை வைத்திருப்பவர்கள் அவர்களின் ஸ்திரத்தன்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், நேர்மை மற்றும் பொறுப்பின் குறிப்பிடத்தக்க அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் இவர்கள் நேர்மையாக இருந்து இருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது.
மக்கள் தங்கள் மொபைல் எண்களை பெரும்பாலும் புதிய வேலைக்கு செல்லும் இடத்தில், புதிய தொடக்கத்தை விரும்பும் போது அல்லது தனிப்பட்ட சில காரணங்களால் மாற்றுகின்றனர். நீண்ட ஆண்டுகளாக ஒரே மொபைல் எண்ணை வைத்திருப்பது அரிதானது. ஒருவர் ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலமாக வைத்து இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடனான அவர்களின் தொடர்புகளை அவர்கள் மதிக்கிறார்கள், வசதிக்காக அல்லது போக்குகளை விட திறந்த தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது.
மேலும், ஒரே எண்ணை நீண்ட காலமாக வைத்து இருப்பது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது. முந்தைய காலத்தில் ஒரு சிம் கார்டு வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஆனால் இன்று ஆதார் மூலம் எளிதாக புதிய சிம் வாங்கி கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரே எண்ணை நீண்ட காலம் வைத்திருக்கிறார் என்றார் அவர் நேர்மையானவர் என்பதை உணர்த்துகிறது. ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பது வெறும் தனிப்பட்ட விருப்பம் அல்ல; இது அவரின் நேர்மை தன்மை மற்றும் குணங்களை உள்ளடக்கியது. சிறிய பிரச்சனைகளுக்கே நம்பரை மாற்றி செல்வோருக்கு மத்தியில் ஒரே எண்ணை நீண்ட காலம் வைத்திருப்பது அவர்களின் அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் அர்த்தமுள்ள உறவுகளின் நீடித்த மதிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ