சாம்பியன்ஸ் டிராபி 2025: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகி உள்ளார். நேற்று (பிப்.19) நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது 5 விக்கெட்கள் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர் வில் யங் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் சதம் அடித்தனர். மேலும், க்ளென் பிலிப்ஸ் அரை சதம் விளாசினார்.
முக்கிய வீரர் விலகல்
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் மற்றும் குஷ்தில் ஷா அரை சதம் அடித்தனர். மேலும், ஃபகார் ஜமான் 24 ரன்களும் சல்மான் ஆகா 42 ரன்களும் அடித்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃப்கர் ஜமான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இமாம்-உல்-ஹக் அணியில் சேர்த்துள்ளனர்.
மேலும் படிங்க: Ind vs Ban: மாபெரும் சாதனைகளை படைக்க இருக்கும் ரோகித் சர்மா.. இதை செய்தால் போதும்!
நேற்று (பிப்.19) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மிதமுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் ஏற்பட்டது எப்படி
போட்டியின் தொடக்கத்தில் வில் யங் அடித்த பந்தை துரத்தி தடுக்க முயன்ற போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய அவர், முதல் இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் மீண்டும் களத்திற்கு திரும்பினார். பின்னர் 4வது இடத்தில் பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங் செய்த ஃபகார் ஜமான் ஓட முடியாமல் சிரமப்பட்டார்.
இந்த நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். ஃபகார் ஜமான் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், அவர் 48.27 சராசரியுடன் 3,138 ரன்கள் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியாக இந்திய அணியை வரும் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.
மேலும் படிங்க: IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்... அக்சர் பட்டேல் ஷாக் - என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ