State Bank Of India Latest News: பேங்க்கில் லோன் எடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடன்களுக்கான கடன் விகிதத்தை குறைத்துள்ளது. எனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறைந்த வட்டி விகிதம் எவ்வளவு? எந்த கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது? வட்டி குறைக்க காரணம் என்ன? போன்றவற்றை பார்ப்போம்.
கடனுக்கான வட்டி குறைகிறது
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்து அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்தியாவில் செயல்படும் வங்கிகள் ரெப்போ ரேட் அடிப்படையில் தான் கடனுக்கான வட்டி விகிதத்தை பிக்ஸ் செய்கிறார்கள். எனவே எப்பவெல்லாம் ரெப்போ ரேட் குறைகிறதோ.. அப்போதெல்லாம் கடனுக்கான வட்டியும் குறைக்கணும்.
ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
அந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்தார்கள். அதாவது 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. 6.50 சதவீத்த்தில் இருந்து 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெப்போ ரேட் குறைப்பு நடவடிக்கையை அடுத்து, பல வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டியை குறைத்து வருகிறார்கள். அதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வீட்டுக் கடன்களுக்கான கடன் விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து வழக்கமான வீட்டுக் கடன் விகிதங்கள் 8.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 8.90 சதவீதமாகக் குறைத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கடனுக்கான இஎம்ஐ குறையும்.
முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடனுக்கான வட்டி 9.15 ஆக இருந்தது. தற்போது அது 8.90 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் கடனுக்கான இஎம்ஐ குறையும். சீக்கிரமாகவே உங்கள் கடனை அடைக்க முடியும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் திருத்தப்பட்ட வட்டி குறைப்பு விகிதங்கள் பிப்ரவரி 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது என எஸ்பிஐ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இபிஎல்ஆர் என்றால் என்ன?
இந்த வட்டி குறைப்பு விகிதங்கள் எந்த கடனுக்கு பொருத்தும் எனப் பார்த்தால், EBLR உடன் இணைக்கப்பட்ட கடனுக்கு மட்டும் பொருந்தும் எனக் கூறியுள்ளனர். EBLR என்றால் எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் லெண்டிங் ரேட்ஸ் (External Benchmark-Based Lending Rate) எனக் கோருவார்கள். அதாவது இதுக்கூட லிங்க் செய்யப்பட்ட லோனுக்கு மட்டும் பொருந்தும். அவர்களுக்கு மட்டும் வட்டி குறைப்பு பெனிஃபிட் கிடைக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.
ஆர்எல்எல்ஆர் என்றால் என்ன?
அதேபோல ஆர்எல்எல்ஆர் (RLLR) உடன் லிங்க் செய்யப்பட்ட லோன் அக்கவுண்ட்டுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. RLLR என்றால் ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் எனக் கூறுவார்கள். இதில் 8.75 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த கடனுக்கான வட்டியில் மாற்றம் இல்லை
இந்த வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடனுக்கான இஎம்ஐ குறையும். ஆனால் MCLR (மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட்), BPLR (பென்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட்) போன்ற கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எந்தெந்த வங்கிகள் வட்டியை குறைத்துள்ளது?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் அல்ல, கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் ரெப்போர்ட் ரேட் கூட லிங்க் செய்யப்பட்ட கடனுக்கான வட்டியை குறைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ