New Delhi Latest News: டெல்லி முதல்வர் சஸ்பென்ஸ்: டெல்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 20 (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலை கட்சியின் டெல்லி பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் புதிய முதல்வர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
பாஜகவின் மத்திய மேலிட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும். பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜக கட்சி எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதல்வர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோருவார்.
ராம்லீலா மைதானத்தில் பிரமாண்டமான பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர் உட்பட சுமார் 50,000 பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்ஷய் குமார், விவேக் ஓபராய் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்கள், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்ற பிரபல தொழிலதிபர்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளிட்டோருக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
டெல்லியின் அடுத்த முதல்வராக பாஜக யாரும் எதிர்பார்க்காத ஒருவரை தேர்வு செய்யக்கூடும் என்று கட்சியில் பலர் கூறுகின்றனர். ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட உத்தியை டெல்லியிலும் பாஜக மேலிடம் செயல்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.
முதல்வர் பதவிக்கான பாஜக எம்எல்ஏக்களுக்கு இடையேயான போட்டி மூன்று பேருக்கு இடையே உள்ளது. ரேகா குப்தா, ஆஷிஷ் சூட் மற்றும் விஜேந்திர குப்தா ஆகிய மூன்று பேர்களில் ஒருவரை டெல்லி முதல்வராக கட்சி தேர்ந்தெடுக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க - யார் இந்த பர்வேஷ் வர்மா? கெஜ்ரிவாலை வீழ்த்தியவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
மேலும் படிக்க - டெல்லியின் தளபதி யார்? முதலமைச்சர் ரேஸில் இருக்கும் 5 பேர்? பாஜகவில் என்ன நடக்கிறது?
மேலும் படிக்க - Delhi Election 2025 Result: தோல்வி முகத்தில் ஆம் ஆத்மி... சில முக்கிய காரணங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ