Central Government Pensioners: மத்திய அரசு ஊழியர்களுக்கும் மத்திய பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு முக்கிய புதுப்பிப்பு வந்தது. இது அவர்களது ஓய்வூதியம் தொடர்பானது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
80 வயதை அடையும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு ஒரு அலுவலக குறிப்பாணை மூலம் வெளியிடப்பட்டது. இதில், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதின் அடிப்படையில் கிடைக்கும் சலுகைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
Additional Pension: கூடுதல் ஓய்வூதிய விவரக்குறிப்பு
வயது வாரியாக கருணை உதவித்தொகை என்று அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் இந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது:
- 80 வயது முதல் 85 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியம்
- 85 வயது முதல் 90 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 30% கூடுதல் ஓய்வூதியம்
- 90 வயது முதல் 95 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 40% கூடுதல் ஓய்வூதியம்
- 95 வயது முதல் 100 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 50% கூடுதல் ஓய்வூதியம்
- 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு: அடிப்படை ஓய்வூதியத்தில் 100% கூடுதல் ஓய்வூதியம்
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 81 வயதுடைய ஒரு ஓய்வூதியதாரர் அவரது அடிப்படை ஓய்வூதியத்தில் கூடுதலாக 20% பெறுவார். 95 வயதுடைய ஓய்வூதியதாரர் ஓய்வூதியத்தில் கூடுதலாக 50% பெறுவார்.
Compassionate Allowance: கூடுதல் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படும்?
ஓய்வூதியதாரர் 80 வயதை அடையும் மாதத்தின் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் அமலுக்கு வரும். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரர் ஆகஸ்ட் 20, 1942 அன்று பிறந்திருந்தால், அவர் ஆகஸ்ட் 1, 2022 முதல் 20% கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார். பொது சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த குடிமக்களை ஆதரித்து நிதி பாதுகாப்பு அளிப்பதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்த விதிகள் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அமைச்சகங்கள் மற்றும் ஓய்வூதிய விநியோக அதிகாரிகளை இந்த குறிப்பாணை கேட்டுக்கொண்டுள்ளது.
கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பு மாறுமா?
ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறத் தொடங்கும் வயது குறித்தும் நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. தற்போது உள்ள விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. எனினும், இது குறித்து சில புகார்கள் உள்ளன. 65 வயது முதல் 75 வயது வரைதான் ஓய்வூதியதாரர்களுக்கு பணத்திற்கான அதிக தேவை உள்ளது. மாறாக 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது பலரது பரவலான கருத்தாக உள்ளது. இது குறித்து நாடாளுமன்றக்குழு ஒரு பரிந்துரையையும் அளித்துள்ளது.
நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரை என்ன?
- 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- அதாவது, 65 வயதிலிருந்து 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை 5% அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
- எனினும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
- இந்த பரிந்துரையின்படி, விரைவில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பு மாற்றப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்.
மேலும் படிக்க | பழைய தங்க நகையை விற்க திட்டமா... சரியான விலை கிடைக்க உடனே இதை செய்யுங்க!
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 108%? 186%? ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ