இந்தியர்களை ஏற்ற்க்கொண்டு இன்று காலை அமெரிக்க c-17 இராணுவ விமானம் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் இந்தியாவிற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது சட்டவிரோத இந்தியர்களை விமானம் மூலம் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ளார்.
அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அமெரிக்காவின் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவனங்கள் ஏதும் இன்றி குடியேறி உள்ளனர். கொல்ம்பியா, இந்தியா, மெக்சிகோ மற்றும் ஆப்பிரிக்கன் மக்கள்.
விமானங்களை தரையிறக்க மறுத்த கொலம்பியா
முதலில் கொலம்பியா மக்களை முழுமையாக வெளியேற்ற டோனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கொல்ம்பிய மக்களை வெளியேற்ற விமானங்கள் தயாராக இருந்த நிலையில், கொலம்பியாவில் விமானத்தை தரையிறங்க விடமாட்டோம் என அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது.
மேலும் படிங்க: 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத ஒரே நாடு எது தெரியுமா?
இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் கொலம்பியா பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இந்த சூழலில் வேறு வழி இல்லாமல் கொலம்பியா விமானத்தை தரை இறக்க ஏற்றுக்கொண்டது. மேலும், கொலம்பியா மக்களை வெளியேற்ற கொல்பியா அரசே விமானங்கள் அனுப்பி வைத்தது. டிரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பால் கொலம்பியா இறங்கி வந்துள்ளது.
இந்தியா என்ன செய்யப்போகிறது
இந்த நிலையில்தான் இந்தியா இதற்கு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலம்பியா போல் இந்தியர்களை அழைத்து வர விமானங்களை அனுப்புமா? அல்லது இந்தியர்களை ஏற்றுக்கொள்ள மறுக்குமா? என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
ஒருவேளை விமானங்களை தர இறக்க இந்தியா அனுமதிக்க வில்லை என்றால் கொலம்பியா போல் இந்தியாவின் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா தயாராக இருக்குமா? என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
மேலும், இது குறித்து தற்போது வரை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: தென் ஆப்பிரிக்காவுக்கு கிடுக்கிப்பிடி.. மற்ற நாடுகளை எச்சரிக்கிறாரா டிரம்ப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ