மீந்து போன இட்லியில் இட்லி உப்புமா மட்டுமல்ல-இதுவும் செய்யலாம்! செம டேஸ்டா இருக்கும்..

Idli Manchurian Simple Recipe : பலர், மீந்து போன இட்லியை வைத்து, உப்புமா செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால் உப்புமாவை தவிர வேறு சில ஸ்நாக்ஸ் கூட இதை வைத்து செய்யலாம்.

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2025, 04:31 PM IST
  • மீந்து போன இட்லியை வைத்து செய்யக்கூடிய பொருள்!
  • இட்லி உப்மா மட்டுமல்ல..
  • வேறு என்ன தெரியுமா?
மீந்து போன இட்லியில் இட்லி உப்புமா மட்டுமல்ல-இதுவும் செய்யலாம்! செம டேஸ்டா இருக்கும்.. title=

Idli Manchurian Simple Recipe : இட்லி உப்புமா என்ற பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் படம், சூரியவம்சம். இந்த படத்தில் தேவயானி மீந்துபோன இட்லியை வைத்து உப்புமா செய்ததால் இந்த ரெசிபி இப்போது இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறது. இதை செய்வது மிகவும் எளிதுதான். ஆனால் இதனாலேயே இட்லி மீந்துவிட்டால் இட்லி உப்புமா செய்வது எப்படி என்று மட்டுமே பார்க்கிறோம். ஆனால் இதைத் தாண்டி இன்னும் சில சுவையான ஸ்நாக்ஸ்களையும் செய்யலாம்.

இட்லி மஞ்சூரியன்: 

தேவையான பொருட்கள்: 

மீந்து போன இட்லி (வெட்டியது) -6

எண்ணெய்-தேவையான அளவு 

சோள மாவு-2 டேபிள் ஸ்பூன் 

மைதா-ஒரு டேபிள் ஸ்பூன் 

உப்பு-தேவையான அளவு 

மிளகுத்தூள்-அரை டீஸ்பூன் 

தண்ணீர்-தேவையான அளவு 

சாஸ்க்கு தேவையான பொருட்கள்: 

எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய்-வெட்டியது 2

வெங்காயம்-பொடியாக நறுக்கியது 1

குடைமிளகாய்-1

சோயா சாஸ்-1 டேபிள் ஸ்பூன் 

தக்காளி சாஸ்-1 டேபிள் ஸ்பூன் 

சிகப்பு மிளகாய் சாஸ்- 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு-சுவைக்காக 

சர்க்கரை-அரை டேபிள் ஸ்பூன் 

மிளகுத்தூள்- அரை டேபிள் ஸ்பூன் 

எப்படி செய்ய வேண்டும்?

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.

வெட்டி வைத்த இட்லியை இதில் தோய்த்து எண்ணெயை சூடாக்கி அதில் வறுக்க வேண்டும்.

அந்த இட்லிகள் நன்கு கோல்டன் பிரவுன் நிறத்தில் வரும் வரை வறுக்கவும்.

இன்னொரு கடாயை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும்.

இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெட்டி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கூடவே குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் அது மொறு மொறுவென வரும் வரை வதக்க வேண்டும்.

சோயா சாஸ், தக்காளி சாஸ், சிகப்பு மிளகாய் சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அரை கப் தண்ணீர் ஊற்றி இதை மிக்ஸ் செய்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

வேண்டுமென்றால் ஒரு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இந்த சாசை இன்னும் திக் ஆக்கலாம்.

இரண்டையும் சேருங்கள்…

இப்போது பொறித்த இட்லியையும் கொதிக்க வைத்த சாசையும் ஒன்றாக சேர்த்து கலக்கலாம்.

இதனை, ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து வதக்க வேண்டும். அப்போது அதில் இருக்கும் ஃப்ளேவர்கள் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

இதனை ஒரு டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட்டால், ஜம்முன்னு இருக்கும்.

இட்லி உப்மா செய்வது எப்படி?

இட்லி உப்மா செய்ய தேவையான பொருட்கள்:

கடுகு-உளுந்து-1 டீஸ்பூன்

எண்ணெய்-2 டீஸ்பூன்

இட்லி-6 வெட்டியது

உப்பு-தேவையென்றால்

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகுளுந்தை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர், தேவையென்றால் உப்பு போட்டு, இட்லி சேர்த்து வதக்க வேண்டும். இது, மொறுமொறுவென ஆகும் வரை வறுத்து, பின்னர் அடுப்பில் இருந்து இறக்கலாம்.

மேலும் படிக்க | சுவையான ரோட்டு கடை காளான் செய்வது எப்படி? ஈசியான ரெசிபிதான்..\

மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News