Parents Should Never Condition Their Kids : குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களை சரியான வழியில் செல்ல ஊக்கப்படுத்துவதும், அதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பதும்தான். ஆனால் ஒரு சில சமயங்களில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு அவர்களே அறியாமல் சில அழுத்தத்தை கொடுக்கின்றனர். குழந்தைகளே கட்டாயப்படுத்தி சில விஷயங்களை செய்ய வைப்பது நேர்மறையான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். அப்படி கட்டாயப்படுத்தி செய்ய வைக்க கூடாததற்கான சில காரணங்களும் இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
மன்னிப்பு கேட்க வைப்பது:
மன்னிப்பு கேட்பவன் தான் மனிதன் என சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இது வாழ்க்கைக்கும் தேவையான ஒரு திறன். ஆனால், குழந்தைகளை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைப்பது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத விஷயமாகும். இப்படி கட்டாயப்படுத்தி ஒருவரை மன்னிப்பு கேட்க வைத்தால் அதற்கு அர்த்தமே இருக்காது. அப்படி கேட்கும் குழந்தைகளுக்கும் புரிந்துணர்வு இருக்காது. இப்படி குழந்தைகளை மன்னிப்பு கேட்க சொல்லி கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களின் செய்க எவ்வாறு ஒருவரை காயப்படுத்தியது என்பதை அவருக்கு விவரிக்க வேண்டும்.
சாப்பிட சொல்லி வற்புறுத்துவது:
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நலனுக்கு என நினைத்து, வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பர். இப்படி அவர்கள் பசியெற்று இருக்கும்போது சாப்பிட சொல்லி வற்புறுத்துவது, மிகவும் ஆரோக்கியமற்ற விஷயமாகும். கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பதால், இயற்கையாக ஏற்படும் பசியுனர்வை அடக்க செய்யும். அதுமட்டுமன்றி உணவு குறித்த தவறான புரிதலையும் அவர்களுக்கு ஏற்படுத்தி விடும். இதனால் குழந்தைகள் அவர்களின் உடல் பேச்சைக் கேட்காமல், தோன்றும் போதெல்லாம் எதையாவது சாப்பிடுவர்.
அவர்களது பொருட்களை ஷேர் செய்ய வைப்பது:
கையில் இருக்கும் விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து வைத்துக் கொள்வது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதை யாரும் வற்புறுத்தி செய்ய வைக்க கூடாது. இப்படி ஒரு விஷயத்தை வலுக்கட்டாயப் படுத்தி பகிர செய்வது, அவர்களுக்கு அதன் மீதான ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு நல்ல உணர்வுகள் மனதில் வளர்வதை விடுத்து, இது குறித்து தவறான புரிதலே ஏற்படும்.
அவர்களை அவர்களின் வழியில் செல்ல விடாமல் இருத்தல்..
அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள தனித்துவமான குணங்கள் இருக்கிறது. நீங்கள் நினைப்பதுதான் சரியான வழி என்று நினைத்து அவர்களுக்கு அதை அப்படியே செய்ய வேண்டும் என திணிக்க கூடாது. இது அவர்களின் படைப்பாற்றலையும் தன்னம்பிக்கையையும் கெடுத்து விடும். புதிர் விளையாட்டுகள், படம் வரைவது, அவர்கள் வைத்திருக்கும் இடத்தை சுத்தம் செய்வது என எதுவாக இருந்தாலும் அவர்களை சுதந்திரமாக செய்யவிட வேண்டும். இப்போதுதான் அவர்களுக்கு பிரச்சினையை தீர்க்கும் திறன் வளர்ந்து, தன் போக்கில் செயப்படுபவர். மேலும் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் வரும்.
நண்பர்களாக இருக்க சொல்வது:
பொதுவாக, பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை சில ‘நல்ல’ குழந்தைகளிடம் நண்பராக இருக்க வேண்டும் எனக்கூறுவர். ஆனால், இப்படி தனக்கு விருப்பமே இல்லாத ஒருவருடன் அந்த குழந்தைகளால் நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, அவர்களை யாருடனும் நட்பை வளர்த்துக்கொள்ள சொல்லி வற்புறுத்தக்கூடாது.
மேலும் படிக்க | பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகள் உங்களிடமிருந்து கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ