EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த பதிவில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
EPF Interest Rate: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28 அன்று ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இபிஎஃப் வட்டி விகிதம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பாப்பு உள்ளது.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28 அன்று ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். கூட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இன்னும் பகிரப்படவில்லை. எனினும், நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை இறுதி செய்வது கூட்டத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
CBTயின் 237வது கூட்டம் பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையிலான CBT, EPFO-வின் முடிவுகளை எடுக்கும் உச்சகட்ட அமைப்பாக உள்ளது. இதில் முதலாளிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் என்ன? 2023-24 நிதியாண்டில், வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை EPFO 8.25 சதவீதமாக நிர்ணயித்தது. 2022-23 ஆம் ஆண்டில் இருந்த 8.15 சதவீதத்தை விட இது அதிகமாகும். 2024-25 -க்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படுமா அல்லது மாறாமல் இருக்குமா என்பது குறித்து வரவிருக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இதற்கு முந்தைய CBT கூட்டம் நவம்பர் 30, 2024 அன்று நடைபெற்றது. இதில், பிஎஃப் க்ளெய்ம் தீர்வுக்கான வட்டி செலுத்துவது தொடர்பாக ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு முன்பு, வட்டி கோரும் க்ளெய்ம்கள் 25 ஆம் தேதி முதல் மாத இறுதி வரை செயல்படுத்தப்படாமல் இருந்தன.
இந்த செயல்முறையின் விளைவாக உறுப்பினர்களுக்கு வட்டி இழப்பு ஏற்பட்டது. புதிய விதி, க்ளெய்ம் தேதி வரை வட்டி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
2023-24 ஆம் ஆண்டிற்கான EPFO வின் ஆண்டு அறிக்கையின்படி, பங்களிப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் 7.18 லட்சத்திலிருந்து 6.6 சதவீதம் அதிகரித்து 7.66 லட்சமாக அதிகரித்துள்ளது.
செயலில் உள்ள EPF உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 2022-23 இல் 6.85 கோடியிலிருந்து 2023-24 இல் 7.37 கோடியாக 7.6 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது. இந்த அறிக்கை கடந்த CBT கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் நீண்டகால சேமிப்பிற்காக இந்த வைப்புத்தொகைகளைச் சார்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து எடுக்கப்படும் முடிவு உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இபிஎஃப் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரித்தால், அது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
மேலும், EPF-க்கு பங்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இபிஎஃப்ஓ தனது செயல்பாடுகளில் செய்து வரும் முன்னேற்றங்களும், உறுப்பினர்களின் வசதிக்காக செய்யப்படும் மாற்றங்களும் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. இந்த நிலையில், இபிஎஃப் வட்டி விகிதமும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பாப்பு எழுந்துள்ளது.