நயன்தாரா உண்மையில் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? இயக்குநர் விஷ்ணுவர்தன் சொன்ன செய்தி..

Director Vishnu Vardhan Talks About Actress Nayanthara : நடிகை நயன்தாரா குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பேசியிருக்கும் விஷயங்கள் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2025, 06:06 PM IST
  • நயன்தாரா குறித்து பேசிய இயக்குநர்!
  • அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
  • இதோ தகவல்..
நயன்தாரா உண்மையில் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? இயக்குநர் விஷ்ணுவர்தன் சொன்ன செய்தி.. title=

Director Vishnu Vardhan Talks About Actress Nayanthara : தமிழ் திரையுலகில் பெரிய நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோயினாக வலம் வரும் இவர், தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, femi9 எனும் பியூட்டி பிராண்டை தொடங்கி அதையும் நடத்தி வருகிறார். இவர் குறித்து, இயக்குனர் அவர்கள் பேசி இருக்கும் விஷயங்கள் தற்போது மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குனரின் பேச்சு..

நயன்தாராவிற்கு திரை உலகை சேர்ந்த சிலர் நண்பர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர், விஷ்ணுவர்தன். பில்லா படத்தை இயக்கிய இவர், சமீபத்தில் நேசிப்பாயா படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், இவர் படம் என்பதால் பலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நயன்தாரா குறித்து பேசி இருக்கிறார்.

நயன்தாராவை ஒரு கெத்தான ஆள் என குறிப்பிடும் அவர், அந்த கெத்து பிறர் பாதிக்கப்படுவது போல இருக்காது எனவும் கூறியிருக்கிறார். மேலும், நயன்தாராவை ஒரு குழந்தை மாதிரி என குறிப்பிடும் அவர், அவருடன் பழகிய அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும் பேசியிருக்கிறார். இவரை attitude காண்பிப்பவர் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் உண்மையில் அவர் ஒரு perfectionist என்றும் விஷ்ணு கூறியிருக்கிறார்.

நயன்தாரா சிக்கிய சர்ச்சை…

நடிகை நயன்தாரா, சமீபத்தில் தனது Femi9 நிறுவனத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், தொழில் முனைவோர்கள் என பலர் வந்திருந்தனர். அப்போது, அங்கு காலை 10 மணிக்கு நயன்தாராவும் விக்னேஷ் இவனும் வருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால் வந்திருக்கும் பார்வையாளர்களை சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வைத்து, மதியம் மேல் தான் இருவரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்ததாகவும் சிலர் கூறியிருந்தனர்.

மேலும், இது குறித்து வைரலான ஒரு வீடியோவில் “நார்மல் பீப்பிள் இல்ல, instagram influencers கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க லைன்ல வந்து நில்லுங்க” என ஒருவர் நயன்தாராவை நார்மலான மனிதர் இல்லை எனக் கூறியது இணையத்தில் வைரல் ஆனது. இதனால் அவர் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.

நீதிமன்ற விவகாரம்..

நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளை, தனது திருமண ஆவண படத்தில் நயன்தாரா உபயோகித்தார். இதனை நீக்கவில்லை என்றால் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து நயன்தாரா என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஒரிஜினல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாது!! வேறு யார் தெரியுமா?

மேலும் படிக்க | தனுஷ்க்கு சாதகமாக செயல்பட்ட நீதிமன்றம்! கலக்கத்தில் நயன்தாரா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News