ஜியோசினிமா இதுவரை தனது பயனர்களுக்கு இலவசமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கூடிய விரைவில் சந்தா அடிப்படையிலான சேவையை வழங்கும் மற்ற இயங்குதளங்களை போல மாறவுள்ளது. ஐபிஎல் 2023 சீசன் முடிவடைந்த பிறகு ஜியோ சினிமா அதிகாரப்பூர்வமாக தனது சேவைகளுக்கான கட்டணத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியின் நேரலையையும் இலவசமாக பயனர்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. ஐபிஎல் போட்டியின் நேரலையை இலவசமாக வழங்கி அனைத்து இயங்குதளங்களுக்கும் போட்டியாக ஜியோ சினிமா அமைந்தது. இப்போது ஜியோ சினிமா வழங்கும் தினசரி, காலாண்டு மற்றும் வருடாந்திர சந்தாக்களுக்கான கட்டணங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இவற்றில் இரண்டு திட்டங்களுக்கு ரூ.100க்கும் குறைவாகவே செலவாகும். ஜியோசினிமா பிரீமியம் கோல்ட், தினசரி மற்றும் பிளாட்டினம் ஆகிய 3 அடுக்குகளைக் கொண்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க
1) ஜியோசினிமா டெய்லி, பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு நாள் பயன்பாட்டிற்கு இதன் விலை ரூ.2 வரை இருக்கலாம். ஆனால், இது ஒரு அறிமுக சலுகையாக இருக்கலாம் மற்றும் இதன் உண்மையான தினசரி கட்டணம் ரூ.29 ஆக கூட இருக்கலாம். மேலும் இந்த திட்டம் 2 சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.
2) தி நெக்ஸ்ட்-இன்-லைன் திட்டம் ஜியோசினிமா கோல்ட் ஆகும், இது 3 மாதங்களுக்கு ரூ.99 விலையில் கிடைக்கும். தள்ளுபடி இல்லாமல் இதன் உண்மையான விலை ரூ.299 ஆக இருக்கலாம். மேலும் இந்த திட்டம் 2 சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.
3) இறுதியாக, 12 மாத சந்தாவிற்கு ஜியோசினிமா பிளாட்டினம் திட்டம் உள்ளது. இதன் உண்மையான விலை ரூ.1199 என கூறப்படுகிறது, அதேசமயம் இந்த திட்டம் தள்ளுபடிக்கு பிறகு உங்களுக்கு ரூ.599 விலையில் கிடைக்கும்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்த தகவல்கள் தான், இருப்பினும் இது அதிகாரபூர்வமானதா என்பது தெரியவில்லை. இந்த கட்டணங்கள் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமானது இல்லையென்றாலும், இந்த ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டங்கள் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற தளங்கள் வழங்குவதை விட மலிவானதாக இருக்கிறது. மலிவான ஜியோசினிமா திட்டத்திற்கு நீங்கள் ரூ.2 மட்டுமே செலவிடுவார்கள், அடுத்த அடுக்குக்கு நீங்கள் ரூ.100 அளவில் செலவு செய்வீர்கள். அதுமட்டுமின்றி ஜியோசினிமா, ஜியோவூட் என மறுபெயரிடலாம் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானதா இல்லையா என்பது கூடிய விரைவில் தெளிவாக தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ஐடிஆர் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ