மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய அரசு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தி இந்தியன் கம்பியூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு (சிஇஆர்டி-இன்) வெளியிட்ட அறிக்கையின்படி, சமீபத்திய அப்டேட்டில் மொஸில்லாவின் தயாரிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சிஇஆர்டி இதனை கண்டறிந்திருப்பது ஹேக்கர்கள் தகவல்களை திருடிவிடுவார்கள் என்பதை தெரிவிப்பது மட்டுமல்லாமல் spoofing attacks, execute arbitrary code மற்றும் பயனர்களின் அனுமதியின்றி முக்கியமான விவரங்களைப் எடுக்க முடியும் என்பதையும் தெரிவுபடுத்துகிறது.
மேலும் படிக்க | வாட்சப்பில் ஆன்லைனில் இருந்து கொண்டே ஆப்லைன் மாற்றுவது எப்படி?
ஃபயர்ஃபாக்ஸ் 98 அப்டேட்டிற்கு முன்னர் உள்ள அனைத்து மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் வெர்ஷன்களும் தற்போது கண்டறியப்பட்டுள்ள. இந்த பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. அதோடு 91.7க்கு முன்னர் இருக்கும் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் இஎஸ்ஆர் வெர்ஷன்கள் மற்றும் 91.7க்கு முன்னர் உள்ள மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் தண்டர்பர்ட் வெர்ஷன்களும் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஸில்லாவில் த்ரெட் ஷட் டவுன், ஆட்-ஆன் சிக்னேச்சர்களை சரிபார்க்கும் போது ஏற்படும் பிழை, ஐஃபிரேம் சாண்ட்பாக்ஸ் கண்டென்ட்டுகளை கட்டுப்படுத்தும் போது ஏற்படும் பிழை போன்றவற்றால் தான் பாதிப்புகள் வருகிறது. பாப்அப்களை அனுமதித்தும், ஸ்கிரிப்ட்களை அனுமதிக்காமலும், பிரவுசர் இன்ஜினில் ஏற்படும் குளறுபடிகளாலும் இந்த பாதுகாப்பு பாதிப்புகள் ஏற்படுவதாக சிஇஆர்டி கூறுகிறது. இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகளை ஹேக்கர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் சிஇஆர்டி கூறுகிறது. ஹேக்கர்கள் பயனர்களை சில லிங்க் அல்லது வெப்சைட்டுகளை பார்க்க வைப்பதன் மூலம் ஹேக் செய்கின்றனர்.
மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் வெர்ஷனை பாதிக்கப்பட்ட பயனர்கள் ஃபயர்ஃபாக்ஸ் 98, ஃபயர்ஃபாக்ஸ் இஎஸ்ஆர் 91.7 மற்றும் தண்டர்பர்ட் 91.7க்கு அப்டேட் செய்யுமாறு சிஇஆர்டி கூறியுள்ளது. மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் எப்படி அப்டேட் செய்யலாம் என்பதை காண்போம். ஃபயர்ஃபாக்ஸ் டூல்பாரின் வலது பக்கத்தில் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்யவும், பின்னர் நீங்கள் ஹெல்ப் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தாக அபவுட் ஃபயர்ஃபாக்ஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும், அதனையடுத்து ஃபயர்ஃபாக்ஸ் அப்டேட்டுகளை சரிபார்த்து அப்டேட் கிடைத்தால் தானாகவே அது டவுன்லோடு செய்ய தொடங்கும். டவுன்லோடு ஆனதும், ஃபயர்ஃபாக்ஸை அப்டேட் செய்ய ரீஸ்டார்ட் என்பதைக் கிளிக் செய்யவும். இதன் மூலம் உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் அப்டேட் செய்யப்பட்டு பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போனை விக்க போறிங்களா? இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR