Mass Tech Layoffs In 2023: புத்தாண்டு தொடங்கி, வெறும் 20 நாள்களே கடந்து உள்ளன. ஆனால், பலரும் தங்களின் வேலையின் நிலைத்தன்மை மற்றும் எதிர்கால வாழ்வு சார்ந்து மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் டெக் உலகில் ஜாம்பவான்களா கருதப்படும் நிறுவனங்களே, ஆயிரக்கணக்கான பணியாளர்களை 'திடீர்' பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கடந்தாண்டில் இருந்து இந்த பணிநீக்க நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில், அமேசான் தனது 18 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தொடர்ந்து பிரபல கூகுள் நிறுவனத்தின் 12 ஆயிரம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என கூகுளின் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் அறிவித்துள்ளது.
அமேசான்
இந்தியாவில் சுமார் ஆயரம் பணியாளர்கள் உட்பட உலகளவில் மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களை, பணிநீக்கம் செய்வதாக அமேசான் அறிவித்தது. கடந்த வாரம், புனேவில் உள்ள தொழிலாளர் ஆணைய அலுவலகம், வெகுஜன ஆட்குறைப்பு மற்றும் தன்னார்வ பிரிவினைக் கொள்கை தொடர்பாக அமேசானுக்கு சம்மன் அனுப்பியது. அமேசான் ஊழியர்களில் சுமார் 1 சதவீதம் பேர் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமேசான் பணிநீக்கங்கள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மைக்ரோசாப்ட்
கடந்த ஜனவரி 18 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. உலகளவில் அவர்களின் பணியாளர்களின், சுமார் விழுக்காடாகும். "பொருளாதார நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகளை மாற்றுவதன் காரணமாக இந்த பணிநீக்க நடவடிக்கை செயல்பாட்டு வருகிறது" என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பணியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும், "சில பகுதிகளில் நாங்கள் பணியாளர்களை நீக்கும் அதே வேளையில், முக்கிய பணிகளில் நாங்கள் தொடர்ந்து பணியாளர்களை பணியமர்த்த உள்ளோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இது ஒரு சவாலான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
சேல்ஸ்ஃபோர்ஸ்
சேல்ஸ்ஃபோர்ஸ் (SalesForce) நிறுவனம், அதன் பணியாளர்களின் 10 சதவீதத்தினரை, அதாவது 8 ஆயிரம் பணியாளர்களை, பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இது கொரோனா தொற்றுநோய்களின் போது விரைவான ஆட்சேர்புக்கு தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோஃப் காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு சவாலான பொருளாதார சூழல் மற்றும் உள்ளார்ந்த வணிக மந்தநிலையை மேற்கோள் காட்டி, சேல்ஸ்ஃபோர்ஸ் ஜனவரி 4 அன்று 8 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது. மேலும், நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம், அலுவலக இடத்தைக் குறைத்தல் மற்றும் ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் செலவுகளைக் குறைப்பது ஆகியவற்றை வருங்கால நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூகுள்
12 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய போகிறோம் என்று கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை நிர்வாகி, ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்ட குறிப்பில் தெரிவித்திருந்தார். ஆல்ஃபாபெட்டின் இந்த நடவடிக்கை, நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு, சில கார்ப்பரேட் செயல்பாடுகள் மற்றும் சில பொறியியல் மற்றும் தயாரிப்புக் குழுக்கள் உட்பட நிறுவனம் முழுவதும் உள்ள பல்வேறு குழுக்களைப் பாதிக்கிறது. இந்த பணிநீக்கம் உலக முழுவதும் உள்ளது செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர்கள் உடனடியாக பாதிக்கப்பட உள்ளனர்.
இன்டெல்
இன்டெல் நிறுவனமும் பணிநீக்க செயல்பாட்டை மேற்கொள்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பே ஏரியாவிலும், அதன் அருகிலுள்ள இடங்களிலும் குறைந்தது நூற்றுக்கணக்கான ஊழியர்களை நீக்க உள்ளது. சாண்டா கிளாராவில் வரும் ஜன. 31ஆம் தேதிக்குள், கிட்டத்தட்ட 201 பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தவிர, சாக்ரமெண்டோ கவுண்டி நகரமான ஃபோல்சோமில் 343 பேரை பணிநீக்கம் செய்வதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, இன்டெல் நிறுவனமானது கலிபோர்னியாவில் 500க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | மார்க்கெட்டை கலக்க வரும் சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5..! லீக்கான விலை பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ