திருச்சி- கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு யூடியூப் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். எப்போதும் யாரையாவது வம்பிழுப்பது, அசிங்கமாக பேசுவது என மோசமான செயல்களையே செய்து வந்தார். யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரைப்போல ரவுடி பேபி சூர்யாவும், சிக்கா என்பவருடன் சேர்ந்து மோசமான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அவர்கள் மீது கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு கொடுக்க இருவரும் கைதாகினர். சூர்யாவும் மற்ற யூடியூபர்களை தரைக்குறைவாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்வது என படுபாதக செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரைப்போல தான் சாதனாவும் செயல்பட்டு வந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், சாதனா மீது கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், டிட்டாக் பிரபலமாக வலம் வந்த சாதனா என்ற பெண் தங்கள் கிராமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சமூகத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக உள்ள அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை அடுத்து சாதனா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து தங்கள் தனித்துவமான பாணியில் அறிவுறை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு காமெடியில் வருவது போன்று ஆகையால் நான் கூற வருவது என்னவென்றால் என இழுத்துக்கொண்டே போன சாதனா கடைசியில் என்ன விட்டுடுங்க நான் இனிமே ஆபாசமா பேசவோ இல்ல ஆபாசமான வீடியோவ யூடியூப்ல போடவோ மாட்டேன் என கதறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘புஷ்பா- 2’வில் என்ன ஸ்பெஷல்?! - ‘லீக்’ ஆன ‘ஃபையர்’ அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR