இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்: ரிஷப் பண்ட்டிற்கு இடம் இருக்கா? பிளேயிங் 11 இதோ!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11-ஐ பார்க்கலாம். 

சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணி இங்கிலாந்து உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (பிப்.06) தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியாவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்னதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /11

இங்கிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். சமீபமாக ரோகித் சர்மாவின் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ள நிலையில், அவர் இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டியில் எப்படி விளையாடுவார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2 /11

இந்தியாவின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட வாய்ப்புள்ளது. 

3 /11

ரன் மிஷின் என அழைப்படும் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இவர் வழக்கம் போல் 3வது இடத்தில் இறங்குவார். 

4 /11

ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போன்ற தொடருக்கு சிறப்பான வீரர். 2023 உலக கோப்பையில் இவரது பங்கு பெரியது. இவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். மேலும் இத்தொடரை வைத்தே சாம்பியன்ஸ் டிராபில் களம் இறக்கப்படுவார். 

5 /11

ஒருநாள் போன்ற தொடர்களில் மிடில் ஆர்டரில் இறங்கி தனது பணியை கச்சிதமாக செய்யக்கூடியவர் கே.எல். ராகுல். இவர் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை ரிஷப் பண்டை பிளேயிங் 11ல் எடுத்தால் இவர் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் 11ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது. 

6 /11

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பெஸ்ட் ஹிட்டராகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். இவரது பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. 

7 /11

இந்தியாவின் மற்றொரு சிறந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆவார். ஆனால் இவரது இடத்திற்கு போட்டியாக அக்சர் படேல் இருக்கிறார். எனவே பிளேயிங் 11ல் இவர்கள் இருவரில் எவரை வேண்டுமானால் தேர்வு செய்யலாம். 

8 /11

இந்திய அணியின் மற்றொரு ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இவர் பேட்டிங்கிலும் சில சமயங்களில் ரன்களை சேர்க்கக்கூடியவர். 

9 /11

இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் களம் இறக்கப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டியாக குல்தீப் யாத்வ்-க்கு இது இருக்கும். மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு முக்கிய விக்கெட்களை எடுத்துக் கொடுக்க கூடியவர். 

10 /11

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான முகமது ஷமி ஓர் ஆண்டு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே களம் இறக்கப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி வர இருப்பதால் இவர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர் பார்ப்புகள் உள்ளன. 

11 /11

இடது கை பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் டேத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறன் உடையவர். முகமது ஷமி மற்றும் இவரது காம்பினேஷன் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.