இந்து மதம், சமண மதம் மற்றும் புத்த மதம் என்று பல்வேறு மத பிரிவுகள் உள்ளன. இவர்கள் உணவுப் பழக்கங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் பல்வேறு ஆய்வுகளின் தகவல் அடிப்படையில் சுமார் 23-30சதவீத மக்கள் சைவ உணவைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் உணவு முறைகள் நிறைந்த நாடு. சைவம், அசைவம் மற்றும் வீகன் என்று இந்தியாவில் மனிதர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்தியாவில் இன்றும் சுத்த சைவ உணவுகளை மட்டும் பின்பற்றும் பிரபல 8 நகரங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
திருமலை: ஆந்திராவில் உள்ள திருமலையில் ஏழுமலையான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இது இந்து மக்களுக்கு மிகவும் புனிதமான ஸ்தலமாகக் கருதுகின்றன. இந்த தேவஸ்தானம் அமைந்துள்ள நகரத்தில் அசைவ உணவு மற்றும் மதுபானங்களுக்குத் தடைசெய்யும் நடைமுறை பின்பற்று வருகின்றன.
ஷீரடி: மகாராஷ்ட்ரிவில் உள்ள ஷீரடியில் அசைவ உணவுகள் சாப்பிடவும் மாட்டார்கள் மற்றும் விற்பனை செய்யவும் மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஷீரடி நகரத்தில் அசைவ உணவு மற்றும் மது அருந்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இங்குக் கடுமையான மத விதிமுறையை பின்ப்பற்றிவருகின்றன.
ரிஷிகேஷ்: உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த நகரம் ஒரு தூய சைவ தலமாகக் கருதப்படுகிறது. அசைவ உணவு மற்றும் மதுபானம் நகரத்தின் எல்லைக்குள் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு தூய சைவ உணவை மட்டுமே வழங்குகின்றன.
பாலிதானா: குஜராத்தில் அமைந்துள்ள இந்த நகரம் உலகின் முதல் சைவ தலைநகராகக் கருதப்படுகிறது. நகர எல்லைக்குள் இறைச்சி, மீன், முட்டை மற்றும் விலங்குகள் போன்றவை உள்ளூர் அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த நகரத்தில் தூய சைவ உணவை மட்டுமே வழங்குகின்றன.
ஹரித்வார்: இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புனித யாத்திரை தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான மக்கள் நகர எல்லைக்குள் நீராட வருகை தருவர். இதனால் நகர எல்லைக்குள் அசைவ உணவு மற்றும் மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிருந்தாவனம்: இந்த நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தூய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இந்த நகரத்தில் கடுமையான வைணவ மரபுகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதனால் அசைவ உணவு மற்றும் மது அருந்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமர் பிறந்த இடமாகக் கூறுவது அயோத்தி நகரம். இங்கு தூய சைவ நகரமாக மக்கள் கருதப்படுகின்றன. இந்த நகர எல்லைக்குள் அசைவ உணவு மற்றும் மதுபானம் விற்பனை செய்யவும் மற்றும் நுகர்வுக்கும் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புஷ்கர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரம்மா கோவிலுக்குப் பெயர் பெற்ற புனித நகரம். இந்த நகரத்தில் கடுமையான மத மற்றும் கலாச்சார விதிமுறைகள் பின்பற்றுகின்றன. இங்குச் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நகரத்தில் அசைவ உணவு மற்றும் மதுபானம் தடைசெய்யப்பட்டுள்ளது.