புதுடெல்லி: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இங்கிலாந்தை 3–1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த தொடரின் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த பின்னர், அதிரடியாக திரும்பி வந்த இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்றது. இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இந்த மூன்று வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள்.
IPL 14 துவங்குவதற்கு முன்பு, டெல்லியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்த மூன்று வீரர்களுக்கும் இந்த ஆண்டு IPL போட்டிகளிலும் தங்கள் அபாரமான திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை கொண்டிருக்கும் பாண்டிங்
IPL 2021 அட்டவணையை BCCI அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, IPL ஏப்ரல் 9 முதல் தொடங்கும். இந்த சூழ்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், IPL-லிலும் பந்த், அக்ஷர் மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது சிறந்த ஆட்டத்தை ஆட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
"டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் IPL 2021-க்கான பயிற்சிகளை தொடங்கப்போகும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். இத்தனை விக்கெட்டுகளை எடுத்த பிறகு, IPL-லிலும் அஸ்வின் மற்றும் அக்சர் இதே போல் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்றும் ரிஷப் பந்த் இன்னும் அதிக ரன்களை எடுப்பார் என்றும் நம்புகிறேன்” என்று பாண்டிங் கூறியுள்ளார்.
ALSO READ: எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell
ரிஷப் பந்த் பதிலளித்தார்
ரிக்கி பாண்டிங்கின் இந்த ட்வீட்டுக்குப் பிறகு, ரிஷாப் பந்தும் அவருக்கு பதிலளித்தார். தனது பதிலில் ரிஷப் பந்த், “உங்களுக்காக காத்திருக்கிறோம் ரிக்” என எழுதியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த IPL 2020-யில், டெல்லியின் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இறுதிப் போட்டியில் டெல்லி அணி மும்பை இந்தியன்சிடம் தோற்றுப் போனது. டெல்லி கேபிடல்ஸ் அணியில், சென்ற IPL போட்டிகளில் ரிஷப் பந்த் அத்தனை சிறப்பாக ஆடவில்லை. அப்படியிருக்க, இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்கள் பந்திடம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அற்புதமாக விளையாடினர். இது அக்சர் படேலின் முதல் டெஸ்ட் தொடராக இருந்தது. அவர் இந்த முழு தொடரிலும், மூன்றே போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வினைப் (R Ashwin) பற்றி பேசுகையில், அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஒரு அற்புதமான சதத்தையும் அடித்தார். நான்காவது டெஸ்ட் போட்டியில் பந்த் ஒரு அற்புதமான சதத்தை அடித்து, அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார்.
ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR