சூரியப் பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், புதிய தமிழ் மாதம் பிறக்கிறது. அதோடு, மாதத்திற்கு இடையில், நட்சத்திர பெயர்ச்சியும் நடைபெறும்.
சூரியப் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க இயலாது. சிலருக்கு சூரிய பெயர்ச்சியின் தாக்கம் மிகவும் சுபமாக இருக்கும், மற்றவர்களுக்குஅசுப பலன்களை அளிக்கிறது.
சூரியப் பெயர்ச்சி பலன்கள்: கிரகங்களின் ராஜாவான சூரியன் மார்ச் 4ம் தேதி மாலை 6.48 மணிக்கு தனது நிலையை மாற்றிக் கொள்ள இருக்கிறார். தேவகுரு என குரு பகவான் அதிபதியாக இருக்கும் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவார்.
சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கும் நிலையில், பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் எனவும். இதனால் மார்ச் மாதம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாகதெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள். கைக்கும் வராமல் இருந்த பணமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன், இந்த காலகட்டத்தில் அதிக வருமானத்தினால் நீங்கள் பயனடைவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதனால் கிடைக்கும் தொடர்புகள் வருங்காலத்தில் ஆதாயத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் . இதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் வேலையில் மற்றும் வியாபாரத்தில் நிதி ஆதாய பலன்களை அதிகம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதனால் திருமண வாழ்க்கையிலும் நல்லிணக்கம் ஏற்படும். முயற்சிகளுக்கான வெற்றி வாய்ப்பு உண்டு.
தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சூரியனின் நடசத்திர பெயர்ச்சியினால், அதிர்ஷ்டம் அளவில்லாமல் இருக்கும். நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் வலுவடையும். இதனுடன், இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் அருள் குறைவில்லாமல் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, நிதி ஆதாயம் ஆகியவற்றைப் பெறுவதற்கான முழு வாய்ப்புகளும் உள்ளன. முன்னர் செய்த முதலீடுகளில் பலன்கள் கிடைக்கும். நிதி நிலை வலுவாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.