வெயிட்லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... எலுமிச்சை - கிராம்பு தேநீர் செய்யும் மாயங்கள் பல

எலுமிச்சை - கிராம்பு மூலிகை டீ: பொதுவாக பால் கலந்த டீயை விட மூலிகை டீ பல வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

பால் கலந்த தேநீரை அளவிற்கு அதிகமாக தினமும் குடித்தால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். கிராம்பு மற்றும் எலுமிச்சை கொண்ட மூலிகை தேநீர் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடியது என்பதோடு எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது.

 

1 /8

எலுமிச்சை - கிராம்பு தேநீர்: எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு சக்தியின் மூலமாகும். எனவே, இரண்டையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படும் தேநீர், ஒரு சிறந்த ஆரோக்கியமான மூலிகை தேநீராக, பல நன்மைகளை அள்ளித் தரும்.

2 /8

எடை இழப்பு பானம்: எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. கிராம்பு, எடை இழப்புக்கு உதவும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது உடலை டீடாக்ஸ் செய்யவும் உதவுகிறது.

3 /8

செரிமான ஆரோக்கியம்: எலுமிச்சை மற்றும் கிராம்பு இரண்டும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே நேரத்தில், எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

4 /8

நோய் எதிர்ப்பு சக்தி: எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நோய்களை எதிர்த்துப் போராடும் வகையில் உடலை வலுப்படுத்துகிறது. சளி மற்றும் இருமல் போன்ற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

5 /8

பல் பிரச்சனைகள்: கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்துகிறது. ஈறுகளின் வீக்கத்தைக் குறைப்பதிலும் கிராம்பு பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சை பற்களின் காணப்படும் மஞ்சள் நிறத்தையும் பற்களின் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.  

6 /8

சரும ஆரோக்கியம்: எலுமிச்சை மற்றும் கிராம்பு இரண்டும் சருமத்தை உள்ளே இருந்து டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தை பருக்கள் இல்லாமல் மற்றும் பளபளப்பாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

7 /8

மூலிகை டீ தயாரிக்கும் விதம்:  1 கிளாஸ் தண்ணீரில் 2 - 4  கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், சிறிது ஆறியவுடன், அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை ஜூஸ் பிழிந்து கொஞ்சம் தேன் சேர்த்தும் குடிக்கலாம்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.