2 வருடத்தில் 30 கிலோ குறைத்த நடிகை சோனாக்‌ஷி! வெறும் வயிற்றில் ‘இதை’ செய்வாராம்..

Sonakshi Sinha Weight Loss Tips : பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, 2 வருடங்களில் 30 கிலோ வரை எடை குறைத்தார். அது எப்படி என்பது குறித்த ரகசியத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 17, 2025, 05:01 PM IST
  • சோனாக்‌ஷி சின்ஹாவின் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • தினமும் வெறும் வயிற்றில் செய்த விஷயம்..
  • நீங்களும் செய்து பாருங்கள்..
2 வருடத்தில் 30 கிலோ குறைத்த நடிகை சோனாக்‌ஷி! வெறும் வயிற்றில் ‘இதை’ செய்வாராம்.. title=

Sonakshi Sinha Weight Loss Tips : சோனாக்ஷியை நாம் அனைவரும் ‘லிங்கா’ படத்தில் பார்த்திருப்போம். அதுதான் அவர் நடித்த முதல் மற்றும் கடைசி தமிழ் படமாகும். இவர், பாலிவுட்டில் பெரிய நடிகையாக வலம் வருபவர். 37 வயதாகும் சோனாக்‌ஷி, 2010ஆம் ஆண்டு முதல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரை சல்மான் கான், அக்‌ஷய் குமார், சயிஃப் அலி கான் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவரும், ஒரு பிரபல நடிகரின் மகள்தான். வழக்கமாக சினிமாவில் ஒருவர் நடிக்க வருவதற்கு முன்பு வெயிட் அதிகமாக இருந்தால் அதனை குறைத்தும், வெயிட் குறைந்து இருந்தால் அதிகப்படுத்தியும் கொள்வர். அந்த வகையில், தனது முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பு சோனாக்‌ஷியும் தனது எடையை குறைத்திருக்கிறார்.

2 வருடத்தில் 30 கிலோ எடை குறைந்த சோனாக்‌ஷி!!

சோனாக்‌ஷியும் உடல் எடையை குறைக்க அனைவரையும் போல ஜிம்மிற்குதான் முதலில் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு வயது வெறும் 18தான். ஆனால், அங்கிருக்கும் ட்ரெட் மில்லில் அவரால் 30 வினாடிகள் கூட ஓட முடியவில்லையாம். இதன் பிறகு தாமதிக்காமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று யோசித்த அவர், அதற்கான முழு முயற்சியில் இறங்கினார். இதனால் அவரால் 2 வருடத்தில் 30 கிலோ எடை குறைக்க முடிந்ததாம். அதற்கு அவர் சாப்பிட்ட விஷயங்கள், பின்பற்றிய டயட், செய்த உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் செய்த விஷயங்கள்..

நடிகை சோனாக்‌ஷிக்கு, ஜிம்மிற்கு சென்று வெயிட் தூக்கவெல்லாம் பெரிதாக பிடிக்காதாம். இதனால், தன் வாழ்விலேயே பல வித மாற்றங்களை ஏற்படுத்தி அவர் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு பிடித்த பயிற்சிகளுள் ஒன்று பிலாட்டீஸ் (Pilates). இது அவரது உடலை வளைத்து நெளிக்க உதவியதாம். அதே போல, காலையில் வெறும் வயிற்றில் 30-40 வினாடிகளுக்கு அவர் கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வாராம். இதற்கு அடுத்த 20 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சியையும் மேற்கொள்வாராம். இது, இப்போது வரை அவரது தினசரி வாழ்வில் ஒரு பங்காக மாறிவிட்டது.

அடிக்கடி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை யோகா, வெயிட் ட்ரெயினிங் போன்றவற்றை செய்யும் இவர் கூடவே நீச்சல் பயிற்சி, டென்னிஸ் விளையாடுவது போன்ற விஷயங்களையும் செய்கிறார். இதனால் இவரது உடல் எடை அப்படியே பேலன்ஸாக இருக்கிறது.

டயட்:

சோனாக்‌ஷி சின்ஹா, பிரெட், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவாராம். அதே போல, பொறித்த உணவுகளையும் அவர் சாப்பிடுவதே இல்லை. என்றாவது ஒரு நாள் ஆசையாக இருந்தால் பீட்ஸா மட்டும் சாப்பிட்டுக்கொள்வாராம். அதிலும் சிறு பகுதிதான் சாப்பிடுவாராம். 

சோனாக்‌ஷி, இப்போது ஹெல்தியான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் பெரும்பாலும் துரித உணவுகள், கடை பொருட்களை வாங்கி சாப்பிடுவதே இல்லையாம். அப்படி ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என தோன்றினால் நட்ஸ், விதைகள் அல்லது வயிறை நிரப்பும் ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடுவாராம்.

நீர்ச்சத்து:

உடல் எடையை குறைக்க நீர்ச்சத்து உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சோனாக்‌ஷி சின்ஹாவும் பின்பற்றினாராம். ஒரு நாளில் பலமுறை தண்ணீர் குடித்து தன்னை தேற்றிக்கொண்ட இவர், சில சமயங்களில் பழச்சாறுகள் அல்லது இளநீர் ஆகியவற்றையும் குடிப்பாராம்.

(பொறுப்பு துறப்பு: மருத்துவர் வு டியான்ஜென் கூறியதுபோல் நீண்ட கால முயற்சியில் உடல் எடையை குறைப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும். எனவே, உடல் எடை குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் முன் நிபுணர்களை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும். மேலே கூறப்பட்ட அனைத்தும் வு டியான்ஜென் கருத்தாகும், இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் 12 கிலோ... படுவேகமாக எடையை குறைத்த பெண் - எப்படி தெரியுமா?

மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News