டெல்லி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம் -முழு விவரம்

Delhi Election Exit Poll 2025 News In Tamil: டெல்லியில் வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 5, 2025, 05:53 PM IST
டெல்லி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம் -முழு விவரம் title=

Delhi Election Exit Poll 2025 Latest Updates: 2025 சட்டமன்றத் தேர்தலில் டெல்லி மக்கள் இன்று வாக்களித்து வரும் நிலையில், வரவிருக்கும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. டெல்லி தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8, சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும். ஆனால் தேர்தலுக்கு முன்பு, புதன்கிழமை வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேசிய தலைநகரின் மனநிலையை என்ன என்பதை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்ப்படும். டெல்லி வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்துக் அறிந்துக்கொள்ளுவோம். 

டெல்லி வாக்காளர்கள் எண்ணிக்கை?

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) டெல்லி மக்கள் சுமூகமாகவும் அமைதியாகவும் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை தகுதியான 1.56 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பயன் படுத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் 83.76 லட்சம் ஆண் வாக்காளர்கள், 72.36 லட்சம் பெண் வாக்காளர்கள் மற்றும் 1,267 திருநங்கை வாக்காளர்கள் அடங்குவர். மேலும் 733 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக சிறப்பாக நியமிக்கப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்றால் என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம். டெல்லி வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் மாலை 6:30 மணி முதல் வெளியிடப்படும். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தொகுதியின் நாடித்துடிப்பை அறிய வாக்காளர்கள் வாக்களித்தவுடன் நடத்தப்படும் ஒரு கணக்கெடுப்பாகும். 

பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது சில சமயம் ஒத்துபோகும் அல்லது கருத்துக்கணிப்புக்கு எதிராகவும் அமையும். ஆனாலும் எந்தக் கட்சி வாக்குப்பதிவில் முன்னணியில் உள்ளது மற்றும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை பொதுமக்கள் கணிக்க இது உதவுகிறது. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்றால் என்ன?

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மக்கள் தீர்ப்பை அளவிட உதவினாலும், அவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (பிரிவு 126A) படி, வாக்குப்பதிவு முடியும் வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது விளம்பரப்படுத்தவோ முடியாது. வாக்குப்பதிவு செயல்பாட்டின் போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வாக்காளர் முடிவுகளை பாதிக்காது என்பதை இந்த விதிமுறை உறுதி செய்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது

ஒரு மாநிலத்தில் அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னரே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ அனுமதிக்கப்படுகின்றன. டெல்லி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதால், இன்று வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பிந்தைய கருத்துக் கணிப்புகளை எங்கு பார்க்கலா? 

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை IPSOS, CVoter, Today's Chanakya, மற்றும் Axis My India உள்ளிட்ட பல ஊடகங்கள் இன்று கணிப்புகளை வெளியிடும். 

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பிந்தைய கருத்துக் கணிப்புகளை எப்பொழுது பார்க்க முடியும்? 

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் காரணமாக பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 6:30 மணி முதல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்படும்.

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு நேரம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 எக்ஸிட் போல் முடிவுகள் விவரம்

2020 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கணித்தன. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, ஆம் ஆத்மிக்கு 59-68 இடங்களை கணித்தது. நியூஸ்எக்ஸ்-நேதா, ஜன் கி பாத் மற்றும் இந்தியா நியூஸ் நேஷன் ஆகியவை ஆம் ஆத்மிக்கு 55 இடங்கள் கிடைக்கும் எனக் கணித்தன. 2020 சட்டமன்றத் தேர்தலில் டெல்லிக்கான எக்ஸிட் போல்கள் துல்லியமாக நிரூபிக்கப்பட்டன, ஏனெனில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்றது, பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 8 இடங்களை வென்றது. தேசிய தலைநகரில் காங்கிரஸால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

மேலும் படிக்க - Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 1 மணி நிலவரம் இதோ!

மேலும் படிக்க - டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!

மேலும் படிக்க - டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News