சட்டுபுட்டுனு உடல் எடைய குறைக்கணுமா: தினமும் இரவில் இதை குடிங்க.... போதும்

Cinnamon Water for Weight Loss: எடையைக் குறைக்கும் இந்த பானத்தை இரவு தூங்கும் முன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2023, 04:08 PM IST
  • இலவங்கப்பட்டை நீரில் காணப்படும் புரோந்தோசயனிடின்களின் உதவியுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது.
  • இந்த நீரை தினமும் இரவில் குடிப்பதால் வெளிப்புற நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.
  • இலவங்கப்பட்டை நீர் செரிமான அமைப்பை சீராக்குகிறது.
சட்டுபுட்டுனு உடல் எடைய குறைக்கணுமா: தினமும் இரவில் இதை குடிங்க.... போதும் title=

உடல் எடையைக் குறைக்கும் பானம்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். 

உடல் எடையைக் குறைப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்.  மற்றும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இரவில் தூங்கும் முன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் எடையுடன் தொடர்புகொண்டுள்ளது. 

உடலுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும் பல மசாலாபொருட்கள் பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவை உடல் ஆரோக்கியத்துக்கு அதிக அளவு நன்மை பயக்கும். அவற்றின் சாறு அதாவது தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் பராமரிக்கிறது. அத்தகைய மசாலாப் பொருட்களில் ஆரோக்கியத்திற்கான இலவங்கப்பட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது. இலவங்கப்பட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் நீரை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. 

இலவங்கப்பட்டை நீரில் காணப்படும் அபரிமிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. இலவங்கப்பட்டை தண்ணீர் உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சு முழுமையாக நீங்குகிறது. இரவில் படுக்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 
 
எடையைக் குறைக்கும் இந்த பானத்தை இரவு தூங்கும் முன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ: 
 
- இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு உடல் சுத்தமாகும். உடல் முழுவதும் நச்சுத்தன்மை நீங்கி, காலையில் வயிற்றில் சேர்ந்திருக்கும் நச்சுகள் தானாக வெளியேறும்.

மேலும் படிக்க | முலாம்பழ விதைகளில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: தெரிஞ்சா தூக்கிப்போட மாட்டீங்க

- இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இலவங்கப்பட்டை நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உடலுக்குள் சென்று இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன.

- இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால், உங்கள் முகத்தில் இயற்கையான பொலிவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டை நீரில் காணப்படும் நார்ச்சத்து செரிமான அமைப்பைச் சரிசெய்கிறது. அதை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேறி, சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீக்கப்பட்டு, சருமம் சுத்தமாகப் பளபளக்கத் தொடங்கும்.

- இலவங்கப்பட்டை நீரில் காணப்படும் புரோந்தோசயனிடின்களின் உதவியுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது. 

- இந்த நீரை தினமும் இரவில் குடிப்பதால் வெளிப்புற நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். 

- இலவங்கப்பட்டை நீர் செரிமான அமைப்பை சீராக்குகிறது. இதில் காணப்படும் நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது, ஏனெனில் இதை குடிப்பதால், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைகின்றன. 

- உங்கள் நினைவாற்றல் பலவீனமாக இருந்தால், தினமும் இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை நீர் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இது நினைவாற்றல் தொடர்பான நோய்களுக்கு நன்மை பயக்கும்.

- மாதவிடாய் காலங்களில் வயிற்றில் ஏற்படும் வலி அல்லது பல் வலி இருந்தால், இலவங்கப்பட்டை தண்ணீர் அவற்றிலும் நன்மை பயக்கும். இது வலியைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இரவில் இந்த தண்ணீரைக் குடிப்பதால் மாதவிடாய் வலி குறைகிறது. மேலும் பல் பிரச்சனைகளையும் இது குறைக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொங்கும் தொப்பையால் அவதியா? இதை செய்தால் 30 நாட்களில் ஸ்லிம்மாகலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News