மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அட, வித்தியாசமா இருக்கே!

Magizh Thirumeni Real Name : விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் எது தெரியுமா? இங்கு அது குறித்து பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 6, 2025, 04:09 PM IST
  • விடாமுயற்சி பட இயக்குநர் மகிழ் திருமேனி!
  • இவரின் உண்மையான பெயர் என்ன?
  • வித்தியாசமா இருக்கே!!
மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அட, வித்தியாசமா இருக்கே! title=

Magizh Thirumeni Real Name : அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம், வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மகிழ் திருமேனி:

குறைவான படங்களையே இயக்கியிருந்தாலும் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமாக அமைந்த இயக்குனர் மகிழ் திருமேனி. 2000 காலகட்டங்களில் திரை உலகிற்குள் நுழைந்த இவர் சில முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின்னர் தடம், தடையற தாக்க, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.

கலை ஆர்வம் மிக்க மகிழ் திருமேனி, தமிழ் புத்தகங்களை விரும்பி படிப்பவர். விடாமுயற்சி படம் குறித்து பல நேர்காணல்களில் சிலாகித்து பேசிய போது, தான் படத்தின் ரிலீஸ் குறித்து கவலையாக இருந்த சமயங்களில் அஜித் தான் தனக்கு மோட்டிவேஷன் கொடுத்ததாக பேசியிருந்தார். நீயா நானா புகழ் கோபிநாத்துக்கு இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலை கொடுத்திருந்தார். அதில் கோபிநாத், “உங்கள் பெயர் உண்மையாகவே மகிழ்திருமேனி தானா?” எனக் கேட்டார். அதற்கு அவர், “என் நிஜப் பெயர் அது அல்ல” என்று கூறினார். விருப்பம் இருந்தால் பெயரை கூறலாம் என கோபிநாத் கூற, அதற்கு அவர் இல்லை வேண்டாம் என தெரிவித்துவிட்டார். இதிலிருந்து அவரது உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என பலர் யோசித்து வந்தனர். 

உண்மையான பெயர் இதுதான்..

மகிழ் திருமேனி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது படத்தின் ஆரம்பத்தில் கிரெடிட்ஸ் காட்டில் “இணை இயக்குனர்” என மார்கன் ஆண்டனி என்ற ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் என சிலர் இணையத்தில் பேசி வருகின்றனர். இது வித்தியாசமாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெயரை சொல்லாமல் இருக்க காரணம்..

ஒருவர், தனது உண்மையான பெயரை சொல்லாமல் இருக்க பலவித காரணங்கள் உள்ளது. குறிப்பாக, திரைத்துறையில் நாம் திரையில் நட்சத்திரங்களாக பார்க்கும் பலரது பெயர், உண்மை பெயரே இல்லை. அந்த வகையில், மகிழ் திருமேனியும் தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டிருக்கலாம். அப்படி இல்லை என்றால், தன் மதத்தின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்று கூட, சிலர் பெயரை வெளியில் கூறுவதில்லை. காரணம், இந்தியாவை பொறுத்தவரை, ஒரு சில மதங்களின் மீது பலருக்கு வெளியில் சொல்லப்படாத வன்மம் இருக்கிறது. இதன் காரணமாகவும், மகிழ் திருமேனி தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம்: 

அஜித் நடிப்பில் கடைசியாக தியேட்டரில் வெளியான படம் துணிவு. இந்த படம் வெளியான போதுதான் விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் இப்படத்தின் வேலைகள் முடிவதற்கு மட்டுமே இரண்டு வருடங்கள் பிடித்துக் கொண்டன. அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற இந்த படத்தின் வேலைகள் சில எதிர்பாராத காரணங்களால் தாமதமானது. இதனால் பொங்கலுக்கு வெளிவர இருந்த படம், கடைசி நேர பணிகளால் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அஜித் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ஆரவ், ரம்யா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | விடாமுயற்சி எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?

மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News