Sarkari Yojana: வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம்! பயனாளிகளுக்கான தகுதிகள் இதுதான்

Betel Cultivation: விவசாயிகளுக்கு வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2023, 03:53 PM IST
  • வெற்றிலை சாகுபடிக்கு மானியம் தரும் மாநில அரசு
  • 50% வரை மானியம் தரும் பீகார் அரசு
  • வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
Sarkari Yojana: வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம்! பயனாளிகளுக்கான தகுதிகள் இதுதான் title=

பல வகையான பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் மானியங்களை வழங்குகின்றன. அரசு மானியங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். பாரம்பரிய விவசாயத்துடன் பணப்பயிர்களையும் விவசாயிகள்  பயிரிட்டு அதிகபட்ச லாபம் ஈட்டுவதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில், பீகார் அரசாங்கம் விவசாயிகளுக்காக பான் விகாஸ் யோஜனா (2023-24 Paan Vikas Yojana) தொடங்கியுள்ளது.

இதன் கீழ் விவசாயிகளுக்கு வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம், நாட்டில் வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதாகும்.

மேலும் படிக்க | Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்

மாகஹி பான் (Magahi Paan) புவியியல் அடையாளக் குறியையும் (ஜிஐ டேக் (GI Tag)) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாஹி பான் அதன் தனித்துவமான சிறப்பு பெற்றுள்ளதால், அதற்கான தேவையும் அதிகம் உள்ளது. மாகஹி பான் என்பது, மகத பகுதியில் விளையும் வெற்றிலை வகை ஆகும். இது ஆயுர்வேத மருந்தாகவும் வாய்க்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சாவிகோல் எனும்  பினால் கலவை ஆனது ஆண்களின் விதை பையை வலுப்படுத்துகிறது, மேலும் விதைப்பை புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு விதை பையில் சுரக்கும் நீரில் உள்ள துத்தநாகம் மூலம் தான் உயிரே கிடைக்கிறது. 

மாகஹி பான் மற்றும் நாட்டு வெற்றிலை சாகுபடி பரப்பை அதிகரிக்க, பீகார் அரசு வெற்றிலை மேம்பாட்டுத் திட்டத்தை இந்த நிதியாண்டில் (2023-24) தொடங்கியுள்ளது. இதன் கீழ் மாகஹி வெற்றிலை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ரூ.35,250 வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும்..

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்

பீகார் வேளாண்மைத் துறை தோட்டக்கலை இயக்குநரகத்தின் சிறப்பு தோட்டக்கலை பயிர்த் திட்டத்தின் கீழ், மாகஹி வெற்றிலையின் பரப்பளவை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதன் கீழ், குறைந்தபட்சம் 100 சதுர மீட்டர் மற்றும் அதிகபட்சமாக 300 சதுர மீட்டர் பரப்பளவில் மாகஹி வெற்றிலை சாகுபடி செலவு ரூ.70,500 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50% மானியம் அதாவது 35,250 ரூபாய் மானியம் கிடைக்கும். விவசாயிகள் சாகுபடிக்காக ரூ.35,250 மட்டுமே செலவிட வேண்டும்.

பயனாளிகள்
பீகாரின் ஔரங்காபாத், கயா, நாளந்தா, நவாடா, ஷேக்புரா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் மாகஹி வெற்றிலை பயிரிடுபவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். வெற்றிலை மேம்பாட்டுத் திட்டத்தின் (2023- 24) கீழ், மாகஹி மற்றும் தேசி வெற்றிலையின் பரப்பளவு விரிவாக்கத்திற்கான ஆன்லைன் விண்ணப்பம் 20 நவம்பர் 2023 அன்று தொடங்கியது. FPC உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட விவசாயிகள் என அந்த வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | வாழை விவசாயிகளை வாழ வைக்கும் அரசு! திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.50000 மானியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News