Cholesterol Control Tips: இன்றைய நவீன யுகத்தில் பல வித வாழ்க்கைமுறை நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம் என இவை அனைத்தும் கடந்த சில தசாப்தங்களில் மிக அதிகமாகிவிட்டன. இவற்றில் உயர் கொலஸ்ட்ரால் மிக பரவலாக காணப்படும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
கெட்ட கொழுப்பு ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. இது நம் இரத்தத்தில் சேரத் தொடங்கும் போது, அது இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் தொடங்குகிறது. இதற்குப் பிறகு, உடல் பருமன், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய் மற்றும் நீரிழிவு போன்ற சிக்கலான பல நோய்களின் ஆபத்து அதிகமாகின்றது. கொலஸ்ட்ரால் அளவை எப்படி குறைப்பது? இதற்கான வீட்டு வைத்தியம் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் இதற்கு சில தீர்வுகளை அளித்துள்ளார். நமது அன்றாட உணவில் சிறிது மாற்றங்களை செய்வதன் மூலம் அதிக கொழுப்பை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறுகிறார். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
கெட்ட கொழுப்பைக் குறைக்க உங்கள் உணவில் இந்த மாற்றங்களைச் செய்யலாம்:
Green Tea: கிரீன் டீ
தினமும் உட்கொள்ளும் சாதாரண தேநீரில் சர்க்கரை, பால் ஆகியவை உள்ளன. இவை கொழுப்பு அதிகரிக்க காரணமாகின்றன. இதற்கு பதிலாக, கிரீன் டீயை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள பண்புகள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். மேலும் இது கெட்ட கொழுப்பை குறைக்கவும் உடல் பருமனை குறைக்கவும் உதவுகின்றது.
Fruits, Vegetables: பழங்கள் மற்றும் காய்கறிகள்
இந்தியா உட்பட பல நாடுகளில், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போக்கு அதிகமாக உள்ளது. இவற்றில் சில நேரங்களில் ஆபத்தான நிறைவுற்ற கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆகையால் இவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது முக்கியம். உங்கள் அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன.
Soyabean: சோயாபீன்ஸ்
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க, புரதசத்த்தின் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதற்கு சோயாபீன்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், அதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பல அசைவப் உணவுகளிலிருந்தும் புரதம் கிடைத்தாலும், அவை உடலில் கொழுப்பை அதிகரிக்கின்றன.
Spices: ஆரோக்கியமான மசாலாக்கள்
கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதை அதிகரித்தாலும், மசாலாப் பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்கக்கூடாது. மஞ்சள், இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் பூண்டு போன்ற மசாலாப் பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை ஆயுர்வேத பண்புகள் நிறைந்தவை. இவற்றின் உதவியால் நரம்புகளில் அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
மேலும் படிக்க | ஆண்களின் அழகை கெடுக்கும் குடல் அசுத்தம்... காரணமும் தீர்வும் முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ