அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.
ஓ மை கடவுளே படத்தை இயக்கி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் டிராகன் . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். லவ் டுடே படத்திற்கு பிறகு இந்த படம் வெளியாகி உள்ளது.
முன்னதாக லவ்வர்ஸ் டேக்கு வெளியாக இருந்த இந்த படம் பிப்ரவரி 21ம் தேதி தள்ளி போகி உள்ளது. விடாமுயற்சி படம் இந்த வாரம் வெளியாவதால் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
டிராகன் படத்தை பார்த்த படத்தின் எக்ஸிக்யூடிவ் புரொட்யூசரான அதிதி ரவிந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதில் இது ஒரு கம்ப்ளீட் எண்டர்டெயினர் என்று குறிப்பிட்டுளளார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். என்னை சிரிக்கவும், அழவும், ஃபீல் பண்ணவும் வைத்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்திக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் புரமோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.