Crime News In Tamilnadu: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, இரண்டு பேர் அந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த கர்ப்பிணி கழிவறைக்கு சென்றபோது அங்கும் சென்று தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 2 நபர்கள்
கர்ப்பணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த 2 நபர்கள் அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். ரயில் வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது கீழே தள்ளிவிட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கர்ப்பிணி பெண்ணை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் படிக்க | பிப்ரவரி 8.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தவறவிடாதீர்கள்!
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்த பெண்ணுக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர்களை ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றவாளி நள்ளிரவில் கைது
இதனையடுத்து நினைவு திரும்பிய பின் அந்த கர்ப்பிணி பெண்களிடம் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர். அப்போது அவர் அதில் குடியாத்தம் கீழ் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை அடையாளம் காட்டியுள்ளார். இதனை அடுத்து ஹேமராஜை நள்ளிரவில் கைது செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் ஹேமராஜ் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வேலூருக்கு ரயிலில் பயணித்த பெண்ணை காட்பாடி அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் ஹேமராஜை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியை கிளப்பிய கிருஷ்ணகிரி சம்பவம்
கிருஷ்ணகிரி போச்சாம்பள்ளி அருகே அரசுப் பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள், 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், அந்த பள்ளி இரண்டு நாள்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இரண்டு நாள்களுக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ் பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ