அஜித்-த்ரிஷா ஜோடியின் ‘இந்த’ ரகசியம் தெரியுமா உங்களுக்கு? 10 வருஷமா யாரும் கண்டுபிடிக்கல..

Ajith Kumar Trisha Jodi Movies Before Vidaamuyarchi : அஜித்-த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இதற்கு முன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படங்களில் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

Ajith Kumar Trisha Jodi Movies Before Vidaamuyarchi : நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜய்யுடன் அதிகமுறை ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை, த்ரிஷாதான். இவரும் அஜித்தும் இணைந்து நடித்திருக்கும் விடாமுயற்சி படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன்னரே அவர்கள் 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். 10 ஆண்டுகளில், இவர்கள் நடிக்கும் படங்களில் ஒரு ரகசியமும் ஒளிந்திருக்கிறது. அது என்ன ரகசியம் தெரியுமா?

1 /8

மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் விடாமுயற்சி படம், வெளியாகியிருக்கிறது. இந்த படம் மூலம், அஜித்தும் த்ரிஷாவும் 4வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இதற்கு முன்னர் இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படங்களில், ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?

2 /8

அஜித்தும் த்ரிஷாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்த பட்ம, ஜி. 2005ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தில் த்ரிஷா பள்ளி மாணவியாகவும், அஜித் கல்லூரி மாணவனாகவும் வருவர். அப்படியே இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொள்ளும். ஆனால், இந்த படத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர மாட்டார்கள்.

3 /8

2007ஆம் ஆண்டில் வெளியான கிரீடம் படத்திலும், அஜித்-த்ரிஷாவின் ஜோடி குறித்து பெரிதும் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு போலீஸ் வேலை இல்லை என்றானபிறகு, அஜித்-த்ரிஷாவின் திருமணம் நின்றுவிடும். கடைசியில் அஜித் போலீஸ் ஆகிவிடுவார். ஆனால், த்ரிஷா அவருடன் சேர்ந்தாரா இல்லையா என்பதை காண்பிக்க மாட்டார்கள்.

4 /8

2010ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் அஜித்-த்ரிஷா காதலர்களாக நடித்திருப்பர். ஆனால், அஜித் த்ரிஷாவை தனது ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ள மட்டுமே செய்வார். இதனால், கடைசியில் த்ரிஷா “ஏன் நண்பனே என்னை ஈர்த்தாயோ..” என்று அழுதுக்கொண்டே காரில் சென்று விடுவார்.

5 /8

கௌதம் மேனன் இயக்கத்தில் 2015-ல் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்-த்ரிஷா இடையேயான அழகான காதலை காண்பித்திருப்பர். ஆனால் இதற்கு முன்னர் இருந்த படங்களை போல, திருமணத்திற்கு முந்தைய நாள் த்ரிஷாவை வில்லன் கொன்றுவிடுவது போல கதை அமைந்திருக்கும்.

6 /8

இப்போது விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா-அஜித் 5வது முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றனர். இந்த படத்தில் த்ரிஷா கடத்தப்படுவது போலவும், அவரைத்தேடி அஜித் செல்வது போலவும்தான் கதை ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது.

7 /8

அனைத்து படங்களை போல, கடைசியில் அஜித்-த்ரிஷா இணைவார்களா? அல்லது பிரிவார்களா? என்பது இந்த படத்தை அனைவரும் சென்று பார்த்தால்தான் தெரியும்.

8 /8

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்திருந்த படம், குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த படத்திலும் த்ரிஷாதான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திலும் இவர்கள் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பது படம் வெளியானால்தான் தெரியும்.