PM Kisan 19வது தவணை எப்போது வரும்? எப்படி செக் செய்வது? முக்கிய அப்டேட் இதோ

PM Kisan Samman Nidhi Yojana: 18வது தவணை அளிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2025, 02:38 PM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • பிரதம மந்திரி கிசான் யோஜனா தொடர்பான முக்கியமான விஷயங்கள்.
PM Kisan 19வது தவணை எப்போது வரும்? எப்படி செக் செய்வது? முக்கிய அப்டேட் இதோ title=

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டின் வளர்ச்சியில் பல துறைகளின் பங்களிப்பு இருந்தாலும், விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுகின்றது. விவசாயிகள் நமது நாட்டின் தூண்களாக உள்ளனர். நாட்டின் முன்னேற்றத்தில் அதிக பங்களிப்பை அளிக்கும் விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் முக்கியமானது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

விவசாயிகளுக்கான இந்த சிறப்பு திட்டம் மத்திய அரசால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவனையிலும் தலா ரூ.2,000 வழங்கப்படுகின்றது.

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 18 தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன. 18வது தவணைக்கான பணம் அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. 18வது தவணை அளிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. 

இந்தத் திட்டத்தின் தவணைப் பணத்தை பிப்ரவரி மாதக் கடைசி தேதியில் அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய அமைச்சரவை  கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அடுத்த தவணையை அதாவது 19வது தவணையை அரசாங்கம் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபுறம், பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் பிரதமர் பீகார் செல்கிறார் என்றும், அங்கு நடக்கும் விழாவில் பிரதமர் 19வது தவணையை வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது. இருப்பினும், தவணைத் தொகை குறித்து அரசாங்கத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

PM Kisan Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் யோஜனா தொடர்பான முக்கியமான விஷயங்கள்

- இதுவரை, அரசாங்கத்தின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் ரூ.2,000 ஆக 18 தவணைகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

- மத்திய அரசு இந்த திட்டத்தின் மூலம் 3 தவணைகளில் ஆண்டும் ரூ.6,000-ஐ வெளியிடுகிறது. 

- விவசாயிகள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், முதலில் சில முக்கியமான பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா தவணையின் பலனைப் பெற விரும்பும் விவசாயிகள், முதலில் e KYC பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்.

பிஎம் கிசான்: தவணைத் தொகையை செக் செய்வது எப்படி? 

- முதலில், விவசாயிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்கு செல்ல வேண்டும்/
- இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில்,‘Know Your Status’ விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஒரு புதிய சாளரம் திறக்கும்.
- இதற்குப் பிறகு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பதிவு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் இங்கே OTP-ஐ உள்ளிட்டதும், உங்கள் நிலையை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது, விதிகளில் மாற்றம்

மேலும் படிக்க | SBI Mutual Fund: ஜன்நிவேஷ் SIP முதலீடு.... லட்சாதிபதியாக ₹250 முதலீடு போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News