சுழல் 2 டிரைலர் வெளியானது! முதல் சீசனை விட பயங்கரம்..

Suzhal The Vortex Season 2 Trailer : பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியானது.  

Written by - Yuvashree | Last Updated : Feb 20, 2025, 05:45 PM IST
  • சுழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2
  • டிரைலர் வெளியானது..
  • முதல் சீசனை விட பயங்கரமோ?
சுழல் 2 டிரைலர் வெளியானது! முதல் சீசனை விட பயங்கரம்.. title=

Suzhal The Vortex Season 2 Trailer :   முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது 
 
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர்.சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது.

முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால் Lal, சரவணன்  Saravanan, கௌரி கிஷன்  Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி  Monisha Blessy (முப்பி), ரினி  Rini (காந்தாரி), ஷ்ரிஷா Shrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர்  Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார்  Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன்  Manjima Mohan மற்றும் கயல் சந்திரன்  Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது.

மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் 

மேலும் படிக்க சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?

மேலும் படிக்க | சுழல் வெப் சீரிஸ் - ரிலீஸ் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News