Actress Dancing In Rajinikanth Coolie Movie : பிரபல தென்னிந்திய நாயகி ஒருவர், கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். அவர் யார் தெரியுமா?
Actress Dancing In Rajinikanth Coolie Movie : கோலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம், கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார் கூடவே உப்பேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்தில், ஒரு பிரபல நடிகை ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடுவதாக கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், கூலி. இந்த படம், வரும் மே அல்லது அதற்கு அடுத்த மாதங்களில் சம்மர் ரிலீஸாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், உப்பேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்ருதி அல்லாது, இந்த படத்தில் இன்னொரு நாயகியும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் திரைப்படத்தில், கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இதில், காவாலா பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.
கூலி படத்தில், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே, முதன் முதலில் நடித்த தமிழ் படம் முகமூடி. இந்த படத்திற்கு பிறகு அவர் வெகு நாட்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அப்படியே பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
பூஜா ஹெக்டேவும், கூலி திரைப்படத்தில் நடனமாடுவதால் அவர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக கைக்கோர்ப்பதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
பூஜா, கூலி படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.