India's Playing XI Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை. முதலில் அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் பின்னர் காயம் குணமடையாததால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். சமீபத்திய போட்டிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி! 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்கள்! இனி மாற்ற முடியாது!
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் இருக்குமா?
இருப்பினும் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து எதிர் அணியை துவம்சம் செய்வார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். துபாய் மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்திய அணியின் வெற்றி எளிதானது தான் என்று கூறப்படுகிறது. சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை வென்று இருந்தது. தற்போது இந்திய அணிக்கு உள்ள பெரிய பிரச்சனை பிளேயிங் 11ல் யார் யாரை எடுப்பது என்பது தான். டாப் ஆர்டர் சரியாக அமைந்துள்ள நிலையில், மிடில் ஆர்டர் மற்றும் ஸ்பின்னர்களில் யாரை தேர்வு செய்வது என்பது தான் பெரிய குழப்பமே.
இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் நான்கு ஸ்பின்னர்களுடன் செல்வதா? அல்லது மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று ஸ்பின்னர்களுடன் செல்வதாக என்ற குழப்பம் தான் நீடித்து வருகிறது. இருப்பினும் துபாய் மைதானத்தில் கூடுதலாக ஒரு வேகப்பந்து பேச்சாளர்கள் இருப்பது நல்லது தான் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி தற்போது சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் துபாய் மைதானத்தில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வருண் சக்கரவர்த்தி விளையாடினால் குல்தீப் யாதவ் விளையாட முடியாது அல்லது குல்தீப் யாதவ் விளையாடினால் வரும் சக்கரவர்த்தி இடம்பெற முடியாது.
இந்தியாவின் பிளேயிங் 11
டாப் ஆர்டரில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் சுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மா வழக்கம் போல களமிறங்குவார்கள். அவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க உள்ளனர். அதைத் தொடர்ந்து கேல ராகுல் களமிறங்குவார். ஒருவேளை தேவைப்பட்டால் அக்சர் படேல் முன்பாகவே இறக்கப்படலாம். அதற்கு அடுத்த படியாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இறங்குவார்கள். வருண் அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள். வேகப்பந்துவீச்சாளர்களில் ஹர்ஸ்தீப் சிங் விளையாடுவது உறுதி என்றாலும், இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி தான் நிலவுகிறது. அனுபவம் வாய்ந்த முகமது ஷமியுடன் செல்வார்களா அல்லது இளம் வீரர் ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கேப்டனாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்? சஞ்சு சாம்சனுக்கு ஆப்ரேஷன்! - வேறு யார் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ