Champions Trophy 2025 Latest News: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ராவின் சேவைகளை இந்திய அணி இழந்தாலும், வங்கதேச அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இல்லாமல் களம் இறங்கும். அவர் தற்போது ஐசிசியால் பந்துவீச தடை செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம்? இந்தியாவில் எந்த சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? நாடு முழுவதும் ஒளிபரப்பப்படும் சேனல்களின் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணியின் கேப்டன்கள் யார்?
மென் இன் ப்ளூ இந்திய அணிக்கு மூத்த வீரர் ரோஹித் சர்மா தலைமை தாங்குவார். நஜ்முல் ஹொசைன் சாண்டோ வங்கதேச அணியை வழிநடத்துவார்.
இந்தியா vs வங்கதேசம் போட்டி நேரம் மற்றும் & இடம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs வங்கதேசம் போட்டி பிப்ரவரி 20 அன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்கும்.
இந்தியா vs வங்கதேசம் போட்டியை எந்த மொபைல் செயலில் பார்க்கலாம்?
இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் JioHotstar வாங்கியுள்ளது. இந்தியா vs வங்கதேசம் போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணி முதல் JioHotstar தளத்தில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs வங்கதேசம் நேரடி ஒளிபரப்பு எங்கு பார்ப்பது?
இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வானியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல், ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் இந்தியா vs வங்கதேச போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நாடு வாரியாக இந்தியா vs வங்கதேசம் போட்டி ஸ்ட்ரீமிங் விவரங்கள்
- பாகிஸ்தான் - PTV மற்றும் Ten Sports, Myco மற்றும் Tamasha செயலியில் நேரடி ஒளிபரப்பு
- யுஏஇ - CricLife Max மற்றும் CricLife Max2, STARZPLAY இல் நேரடி ஒளிபரப்பு
- இங்கிலாந்து - Sky Sports Cricket, Sky Sports Main Event, SkySports Action, SkyGO, NOW மற்றும் Sky Sports App வழியாக டிஜிட்டல் கவரேஜ்
- அமெரிக்கா மற்றும் கனடா - WillowTV, Willow by Cricbuzz செயலியில் நேரடி ஒளிபரப்பு
- கரீபியன் தேசம் - ESPNCaribbean தொலைக்காட்சியில், ESPN Play Caribbean செயலியில் நேரடி ஒளிபரப்பு
- ஆஸ்திரேலியா- PrimeVideo, இந்தியிலும் கவரேஜ் கிடைக்கிறது)
- நியூசிலாந்து - Sky Sport NZ, Now மற்றும் SkyGo செயலியில் டிஜிட்டல் கவரேஜ்
- தென்னாப்பிரிக்கா மற்றும் சஹாரா பிரதேசங்கள் - SuperSport மற்றும் SuperSport செயலி
- வங்காளதேசம் - நேரியல் ஒளிபரப்புக்கான Nagorik TV மற்றும் T Sports, Toffee செயலி வழியாக டிஜிட்டல்
- ஆப்கானிஸ்தான் - ATN
- இலங்கை - மகாராஜா டிவி (லீனியரில் டிவி1), சிரச வழியாக டிஜிட்டல்
மேலும் படிக்க - இந்தியா vs வங்கதேச சாம்பியன்ஸ் டிராபி போட்டி.. மழை பெய்யுமா? துபாய் வானிலை எப்படி?
மேலும் படிக்க - IND vs BAN: குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு இல்லை! இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ